Monday, September 1, 2014

அம்மாடி, ஆத்தாடி, இதுதான் பிள்ளையார் கதியாடி?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgMCQIuAxClbOMzHGDgU5JQSQ0zmtr1N9hEjCXMMEAQCqTTsqLbUWltvA-1rz_lsSKhGB_34JuznXJvudPJtQYwKD3n1P9zQKVWtF2HueabgWHxsftWaZj8148kzYW-i-ON6jdqlxeFjtT/s1600/vin.jpg

நேற்று விழுப்புரத்தில் பார்த்த காட்சி இது. 

விழுப்புரம் ரயில் நிலையத்தை தாண்டி புதுவை சாலையில் உள்ள பாணாம்பட்டு கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம். 

வழியில் ஒரு இடத்தில் பிள்ளையாரைக்  கரைப்பதற்கான லாரி நின்று கொண்டிருக்க  பிள்ளையார் முன்பு பத்து பதினைந்து இளைஞர்கள் வேகமான குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இடம் ஒரு சர்ச்.

ஆட்டோ அந்த இடத்தை தாண்டி வந்து விட்டது. பிறகு பாணாம்பட்டு செல்லும் சாலையில் இறங்கிக் கொண்டோம். எங்களது உறவினர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. அவர் எனது மனைவியை அழைத்துச் சென்று விட்டார். 

அவர் மீண்டும் வருவதற்காக காத்திருந்த போது மீண்டும் பிள்ளையார் லாரி அங்கே வந்தது.  வண்டியை நிறுத்தினார்கள். "அம்மாடி, ஆத்தாடி, உன்னை எனக்கு தரியாடி" என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்க மீண்டும் ஒரு குத்தாட்டம். வெறியாட்டமாக இருந்தது. எல்லோரும் முகத்தில் கலர் பொடிகளை அப்பிக் கொண்டு காவித்துண்டை தலையில் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டார்கள்.

அத்தனை பேரும் டாஸ்மாக் உபயத்தில் உற்சாகத்தில் இருந்தார்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த இடமும் ஒரு கிறிஸ்துவ கான்வெண்ட். 

வீடுகளிலும் கோயில்களிலும் இருந்த பிள்ளையாரை வலுக்கட்டாயமாக தெருவில் நிறுத்துவதே மாற்று மதத்தாரோடு வம்பிழுக்க மட்டுமே என்பதை  இச்சம்பவம் உணர்த்துகிறது.

மோடி சர்க்காரில் இது போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நடக்கப் போகிறது.

அம்மாடி ஆத்தாடி பாட்டு கேட்ட பிள்ளையார்தான் பரிதாபத்துக்குரிய கடவுள்.

 

No comments:

Post a Comment