ஒரு வழியாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. ஜெ விற்கும் மற்றவர்களுக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு விட்டது.
அதிமுக் காரர்களால் அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை. தர்மம் வென்றது, நீதி வென்றது என்று பல வண்ணப் போஸ்டர்கள் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். கிலோக்கணக்கில் லட்டுகள் செய்து வீதிகளில் போவோருக்கும் வருவோருக்கும் கொடுக்க ஏற்பாடுகள் இருந்தது.
லட்டு பெற வேண்டிய ஆட்களை அங்கங்கே அடித்து துரத்திக் கொண்டுள்ளனர். வேலூரில் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்று தெரியவில்லை. நான்கு மணிக்கு குண்டாந்தடி தொண்டர்களின் உலா இருந்ததாக தகவல் இருந்தது.
ஜெ யின் ஆட்க்ள் சொல்லத் துடித்துக் கொண்டிருந்த "தர்மம் வென்றது" வசனத்தை இப்போது கழகக் கண்மணிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரியும். நாளை ஆ.ராசாவிற்கோ, கனிமொழிக்கோ இதே போன்றதொரு தீர்ப்பு வந்தால் அப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது என்றுதான் சொல்வோம் என்று.
இரண்டாவது இன்று வென்றுள்ள தர்மம் நிரந்தர தர்மமா என்பதுதான். உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்ற்ம், உலக நீதிமன்றம் என்று வரிசையாக மேல் முறையீடு செய்யும் போது எங்காவது ஓரிடத்தில் தர்மம் ஒளிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள்.
மூன்று அப்பாவி மாணவிகளின் உயிரை குடிக்க காரணமாக இருந்த ப்ளெசண்ட் டேஸ் ஹோட்டல் வழக்கில் இறுதியில் ஜெ விடுதலையானார். அவரது கட்சிக்காரர்கள்தான் இறுதியில் தூக்கு மேடைக்கு முன் நிற்கிறார்கள். டான்சி வழக்கில் உயர்நீதி மன்றம் அளித்ததை விட ஆலமரப் பஞ்சாயத்தில் கூட இன்னும் தெளிவான தீர்ப்பு வந்திருக்கலாம்.
ஆக இப்போதைக்கு தற்காலிகமாகவாவது தர்மம் வென்றுள்ளது என்று மகிழ்ச்சியடையலாம். அதன் மூலம் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெருமை கிடைக்கவுள்ளது.
இரண்டாவது முறையாக பினாமி முதல்வரை பெறப் போவதனால்.
பீகாரும் நாமும் சமமான நிலையில் இருந்தோம். இப்போது மீண்டும் முன்னணியில் தமிழகம்.
comrate
ReplyDeletei have one doubt, due to this judgement the mentioned 66 cr. will back to govt in any form or swgha only!!
Seshan / Dubai
KARUNANIDHI WILL NOT REJOICE BECAUSE THE NEXT JAIL SENTENCE WILL BE FOR
ReplyDeleteHIS KANI AND MR RAJA . DAYANITHI AND KALANIDHI ARE ALSO NOT FAR BEHIND.
KARAIKUDI CHIDAMBARAM WILL ALSO FACE THE MUSIC. POLITICIANS SHOULD LEARN
AND EVEN THE SOCALLED CLEAN BJP TOO HAS SOME CORRUPTED IN THEIR RANKS.
//ஆ.ராசாவிற்கோ, கனிமொழிக்கோ இதே போன்றதொரு தீர்ப்பு வந்தால்//
ReplyDeleteஅந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.