இந்தியாவை சுத்தமாக்க துடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு நானே தெருவில் இறங்குவேன் என்று வழக்கம் போல் இன்னொரு ஸ்டண்ட் முழக்கம் அடித்துள்ள மோடி அவர்களே இது ரொம்ப பழசு. நேற்று இன்று நாளை படத்தில் லதா, பிறகு பெயர் நினைவுக்கு வராத ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ஆகியோர் செய்து விட்டனர்.
இந்தியாவில் குப்பை அதிகம் உள்ளது என்பது உண்மைதான். நீங்கள் புறக்குப்பை பற்றி பேசியுள்ளீர்கள். அதை விட அதிகமாக அகக்குப்பை உங்கள் கட்சியிலும் உங்கள் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் ஸிடமும் உள்ளது.
செவ்வாயில் மங்கள்யான் இறங்கியுள்ள நேரத்தில் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ராமர் பாலம் என்ற மூட நம்பிக்கைக் கட்டுக்கதை மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளீர்கள். இன்னும் எத்தனையோ மூட நம்பிக்கைகளை பரப்புவதில் உங்கள் படைக்கு நிகர் யாரும் கிடையாது. அந்த மூட நம்பிக்கை குப்பையை முதலில் சுத்தம் செய்யுங்கள்.
இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய் என்று சொல்லி தமிழை இழிவு படுத்தியுள்ளார் உங்கள் உள்துறை அமைச்சர். ஹிந்தியை திணிப்பதில் காண்பிக்கிற வேகம் இருக்கிறதே, அதை உங்கள் கூட்டணிக் காரர்களாலேயே தாங்க முடியவில்லை. எனக்கு விருப்பமில்லாமல் என் மீது திணிக்கும் மொழி எனக்கு குப்பைதான். இந்த மொழித் திணிப்பு எனும் குப்பையை அகற்றி விடுங்கள்.
உங்களுடைய மத வெறி அஜெண்டாவைப் பற்றி ஏராளமாக எழுதியாகி விட்டது. அந்தக் குப்பை சுத்தமாகுமா சார்? கங்கை சுத்தமாகலாம். கூவம் கூட சுத்தமாகலாம். ஆனால் மத வெறியை விடுவதா? நெவர் என்று சொல்வது கேட்கிறது சார்.
காங்கிரஸ் கட்சி சேர்த்து வைத்த அதே பொருளாதாரக் கொள்கைக் குப்பையை நீங்களும் சிம்மாசனம் போட்டு மரியாதை கொடுக்கிறீர்களே? அது சுத்தமாக வாய்ப்புண்டா சார்?
இன்னும் ஏராளமான கேள்விகளோடு மீண்டும் வருகிறேன் சார்.
ஆஹா, இந்த குப்பைகளையெல்லாம் நீங்கள் சுத்தம் செய்ய புறப்பட்டால் உங்கள் கை துடைப்பத்தை உங்களுக்கு எதிராகவே உங்களைக் கொண்டு வந்த முதலாளிகளும் குரு பீடமும் திருப்பி விடும் அபாயமும் உள்ளதல்லவா?
பின் குறிப்பு " நீங்கள் துடைப்பத்தோடு இருப்பதாக தயாரித்து வெளியிடப்பட்ட மோசடி போட்டோ ஷாப் போட்டோ நினைவில் உள்ளதா?
comrate,
ReplyDeletewhy the another photo not a fake.
Seshan/ Dubai
ஒரு புறம் மங்கல்யான், மறு புறம் இராமர் கோயில்
ReplyDeleteதெளிவான முரண்பாடு