சொத்து மதிப்பிலும் கையிருப்பு மற்றும் முதலீட்டில்
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் எல்.ஐ.சி இன்னொரு அம்சத்திலும்
முதன்மையானதாக திகழ்கிறது.
தனி நபர் கடன் வழங்குவதில் அனைத்து வங்கிகளும்
சேர்ந்து கொடுத்த தொகையைக் காட்டிலும் கூடுதலான தொகையை எல்.ஐ.சி
வழங்கியுள்ளது.
வைப்புத் தொகை யின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து
வங்கிகளும் சேர்ந்து அளித்துள்ள தனிநபர் கடன் ரூபாய் 58,000 கோடி
ரூபாய். ஆனால் எல்.ஐ.சி மற்றும் தனியொரு நிறுவனமாக இன்சூரன்ஸ் பாலிசிகள் மீது
அளித்துள்ள தனி நபர் கடன் 60,000 கோடி ரூபாய்.
இப்படி எல்லா அம்சங்களிலும் சிறப்பாக
செயல்படுவதால்தான் எல்.ஐ.சி யை ஒழித்துக்
கட்ட வேண்டும் என்று மத்தியரசு
முயற்சிக்கிறது போலும்.
இரண்டு கடன்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்யாசம் இருக்கிறது. எல் ஐ சி கொடுப்பது பாலிசி தாரர் ஏற்கனவே கட்டிய பணத்தின் மீது. பாலிசி தாரர் பணம் கட்டவில்லை என்றால் எல் ஐ ஸிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் வங்கிகள் விஷயம் வேறு.
ReplyDeleteவாங்க பந்து சார், ரொம்ப நாளா பார்க்க முடியலயே. //வைப்புத் தொகை யின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் சேர்ந்து அளித்துள்ள தனிநபர் கடன் ரூபாய் 58,000 கோடி ரூபாய்.//
ReplyDeleteவங்கிகள் வைப்புத்தொகை மீது அளிப்பதும் எல்.ஐ.சி போல Secured Loan தான். வங்கிகள் பொதுவாக கடனை ஊக்குவிக்காமல் FD யை முடிக்கச் சொல்லுவார்கள். எல்.ஐ.சி பாலிசியை சரண்டர் செய்வதற்குப் பதிலாக கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தும். ஏனென்றால் அப்போதுதான் பாலிசிதாரருக்கு காப்பீட்டு வசதி தொடரும். இந்த அணுகுமுறையை நான் இன்னும் விளக்கமாக சொல்லியிருக்க வேண்டும்
மோசமான பொருளாதார கொள்கை தான் பிடிக்கும் போல. வங்கியில் கடன் வாங்கினால் நம்மள ஒழித்து விடுவார்கள். நாம லோன் கொடுக்கும்போது பாலிசி தாரர்களிடம் நேரடியாக சொல்கிறோம் .
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி.
ReplyDelete