Saturday, February 21, 2026

வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .

 


மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது. 






Friday, February 20, 2026

புதிய பாபர் மசூதியைக் கூட . . .


 சங்கிகளால் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல ஒரு மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்து அந்த பணிகள் துவங்கியுள்ளன. அவரை மம்தா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார். மம்தாவிற்கு விழும் முஸ்லீம் வாக்குகளை திசை திருப்ப சங்கிகளால்  ஏவி விடப்பட்டுள்ளவர் ஹுமாயுன் கபீர் என்பது அவரது சந்தேகம்.  ஒவைஸி உதாரணம் வேறு இருக்கிறதல்லவா! ரகசியம் விரைவில் தெரிய வரும்.

நிற்க

மேற்கு வங்கத்தில் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயரை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேவகி நந்தன் பாண்டே என்றொருவர் பொது நல வழக்கு தொடுக்க இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு பாபரின் பெயரில் இந்தியாவின் வேறு மூலையில் இன்னொரு மசூதி ஏற்படுவதை ஏற்க முடியவில்லை போல . . .

பிகு: புதிய மசூதி கட்ட அயோத்தியில் இடம் ஒதுக்கப்பட்டதே, அங்கே புதிய மசூதி கட்டியுள்ளார்களா? நாளை பார்ப்போம்.

பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்

 


தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.

சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு  கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.

எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.

கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

Thursday, February 19, 2026

இந்தியாவை இழிவு படித்திய சங்கிப் பல்கலைக்கழகம்

 


சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.

அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த  இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.

இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.

இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?

கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.




இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.



அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான். 

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

Wednesday, February 18, 2026

நாங்களும் முதலமைச்சர்கள்தான் . . .


 திரு பர்கலா பிரபாகர் எழுதி ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்த "புதிய இந்தியா எனும் கோணல் மரம்"  நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையாக முடித்த பின்பு விரிவாக எழுதுவேன். "வச்சு செய்யறது" என்பதற்கு உதாரணம் இந்த நூல்.




அந்த நூலிலே "அசாதாரணமாக்கு, காட்சிப்படுத்து" என்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் கீழே உள்ளது.





இந்த செய்தியை இதற்கு முன்பு கூட படித்த நினைவு. ராஜ்நாத்சிங்கோ, அருண் ஜெய்ட்லியோ சொன்னார்கள் என்று நினைவு.


மொரார்ஜி தேசாய் மஹாராஷ்டிர (முந்தைய பம்பாய் மாநிலம்) மாநில முதலமைச்சராகவும்

சவுத்ரி சரண் சிங்கும், விஸ்வநாத் சிங்கும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும்

பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும்

ஹெச்,டி,தேவே கௌடா, கர்னாடகாவின் முதல்வராகவும்

இருந்திருக்கிறார்கள்.

மோடியை உயர்த்திப் பிடிப்பதற்காக அவர்கள் எப்படி வரலாற்றை மறைக்கிறார்கள் பாருங்கள்! 

இதை மூடச்சங்கிகள் நம்ப வேறு நம்புவார்கள்.




அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Tuesday, February 17, 2026

இதுதான் கிரிக்கெட் உணர்வு

 


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சிறையில் இருப்பது நாம் அறிந்ததே. அவருடைய பார்வைத் திறனில் 85 % ஐ இழந்து விட்டார் என்றும் சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை என்றும் காலையில்தான் படித்தேன்.

இப்போது வந்த ஒரு செய்தி நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த . ஒரு மகளிர் அணி கேப்டன் உட்பட முன்னாள் கேப்டன்கள்  பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பெருமை சேர்த்த இம்ரான் கானுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான, கௌரவமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.

நம் இந்திய அணியின் அடையாளங்களாக திகழும் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் கையெழுத்திட்ட இக்கடிதத்தில் உலகப் புகழ் பிரபலங்கள் கிளைவ் லாயிட், கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

அந்த கடிதம் இங்கே

We, the undersigned former captains of our national cricket teams, write with deep concern regarding the reported treatment and incarceration conditions of Imran Khan, the distinguished former Captain of Pakistan and a legendary figure in world cricket. Imran Khan’s contributions to the game are universally admired. As captain, he led Pakistan to their historic 1992 Cricket World Cup victory—a triumph built on skill, resilience, leadership, and sportsmanship that inspired generations across borders.

 

Many of us competed against him, shared the field with him, or grew up idolising his all-round brilliance, charisma, and competitive spirit. He remains one of the finest all-rounders and captains the sport has ever seen, earning respect from players, fans, and administrators alike. Beyond cricket, Imran Khan served as Prime Minister of Pakistan, leading his nation during a challenging period. Regardless of political perspectives, he holds the honour of having been democratically elected to the highest office in his country.

 

recent reports concerning his health – particularly the alarming deterioration of his vision while in custody and the conditions of his imprisonment over the past two and a half years have caused us profound concern. As fellow cricketers who understand the values of fair play, honour, and respect that transcend the boundary rope, we believe that a person of Imran Khan’s stature deserves to be treated with the dignity and basic human consideration befitting a former national leader and a global sporting icon.

 

We respectfully urge the Government of Pakistan to ensure that Imran Khan receives: Immediate, adequate and ongoing medical attention from qualified specialists of his choosing to address his reported health issues. Humane and dignified conditions of detention in line with international standards, including regular visits by close family members. Fair and transparent access to legal processes without undue delay or hindrance.

 

Cricket has long been a bridge between nations. Our shared history on the field reminds us that rivalry ends when the stumps are drawn – and respect endures. Imran Khan embodied that spirit throughout his career. We call on authorities to honour it now by upholding the principles of decency and justice. This appeal is made in the spirit of sportsmanship and common humanity, without prejudice to any legal proceedings.

இரண்டு அம்சங்களில் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

காலமெல்லாம் தங்களோடு விளையாட்டில் மோதிய ஒருவருக்கு பிரச்சினை என்று வருகிற போது நாடு மறந்து அவருக்காக குரல் கொடுக்க ஒன்று சேர்ந்தது முக்கியமான ஒன்று.

அடுத்த அணி வீரர்களுக்கு கை கொடுக்கக்கூடாது என்று வெறுப்பரசியலை இந்திய கிரிக்கெட்டை நிர்வாகம் செய்யும் பாஜகவினர் புகுத்தியுள்ள சூழலில் இம்ரான் கானிற்காக கவாஸ்கரும் கபில்தேவும் குரல் கொடுத்துள்ளது இன்றைய கிரிக்கெட் அணியினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

நேர்மையாக, நாகரீகமாக, நட்புணர்வோடு நடந்து கொள்வதைத்தான் கிரிக்கெட்  உணர்வு என்பார்கள்.

அது இன்று அருகி வரும் நிலையில் இந்த கடிதம் கிரிக்கெட் உணர்வை புதுப்பித்துள்ளது. 


மோடியின் ஆளும் மோடி மாதிரிதானே பேசுவான்!

 


பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மட்டம் தட்டுவதாக நினைத்து த்ரிஷாவை இழிவு படுத்தி பேசினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்பே பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஒரு பொதுக்கூட்டத்திலேயே கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணியை ஆபாசமாக பேசுகிறார்.

இவர்கள் இப்படி பேசியது எனக்கு ஆச்சர்யமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை. 

சில காலம் முன்பாக பத்திரிக்கையாளர்களை மிக மிக கேவலமான, ஆபாசமான வார்த்தையில் ஆட்டுக்காரன் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது?

கண்டிப்பாக மோடியிடமிருந்துதான்.

பாஜக கொலைகாரர்களால் துரத்தப்பட்டு வேறு வழியின்றி இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை" என்று நக்கல் செய்ததையும் சோனியா காந்தியை கொச்சையான வார்த்தை கொடுத்து விவரித்ததையும் மறந்து விட முடியாது.

மோடியை அப்படி பேச வைப்பது எது?

அவர்களின் டி.என்.ஏ வில் ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனை. அதை அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அதுதான் 

சனாதனம் . . .

Monday, February 16, 2026

பொன்னியின் செல்வன் பாடல் சர்ச்சையும் வேறொரு அற்புதமும் . . .

 


இரண்டு நாட்களாக ஊடகங்களில் அடிப்பட்ட ஒரு செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியது. ஏற்கனவே உருவான சர்ச்சையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது ஏனோ கைவரவில்லை. அது அவசியம் எழுதப்பட வேண்டிய விஷயம். இரண்டு மூன்று நாட்களில் எழுதுவேன். 

இப்போதைய சர்ச்சையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "வீரா ராஜ வீரா" பாடல் டாகர் சகோதரர்களின் "சிவஸ்துதி" யை காப்பி அடித்த பாடல் என்ற  வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு முன்பாக ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

நன்றாக சிக்கிக் கொண்டார் என்று ரஹ்மான் என சங்கிகளும் சரி இளையராஜா வெறியர்களும் சரி  தீவிரமாக களமாடிக் கொண்டிருந்தனர். :இஸ்லாமியர் ரஹ்மான் காப்பியடித்தது இந்து மதக் கடவுள் மீதான பாட்டை " என்று சொல்லி வேறு குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். 

இந்த தகவல் உண்மையா என்பதை நேற்று முழுவதும் செலவழித்து ஆராய்ந்தேன்.

காப்பி அடித்ததாக சொல்லப்பட்ட பாடல் இது


சிவஸ்துதி என்று யூட்யூபில் தேடினால் முதலில் எஸ்.பி.பி பாடிய பாடல் வந்தது. அந்த பாடலுக்கும் பொன்னியின் செல்வன் பாடலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. 

கொஞ்சம் விரிவாக தேடிய போது கிடைத்த :சிவ ஸ்துதி" கீழே


இதனை கேட்கும் போது ஒரு விஷயம் தெளிவானது.

"வீர ராஜ வீரா" பாடலின் பல்லவியும் இந்த "சீவா சீவ சீவா" பாடலும் ஒன்றுதான். பொன்னியின் செல்வன் பாடலின் தொகையறாவும் சரணமும் வேறு. ஆனால் கண்டிப்பாக பல்லவி இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். 

ஆனால் இந்த காணொளியில் குண்டேச்சா சகோதரர்கள் என்று இருந்ததே தவிர டாகர் சகோதரர்கள் என்று இல்லை. அதனால் தேடல் தொடர்ந்தது.

டாகர் சகோதரர்கள் வழங்கிய "சிவ ஸ்துதி" யும் கிடைத்தது. 

அது கீழே . . .


யார் இந்த டாகர் சகோதரர்கள் என்று தேடிய போதுதான் சில அற்புதமான விஷயங்கள் தெரிய வந்தது. 

யார்  இந்த டாகர் சகோதரர்கள்? எந்த ஊர்க்காரர்கள்?

ஹிந்துஸ்தானி இசையில் த்ரூபத் என்ற பாரம்பரிய பாணியை பின்பற்றுபவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இருபது தலைமைமுறைகளாக இசைத்து வருபவர்கள். இவர்கள் தனியாக டாகர்வாணி என்ற தனியொரு பாணியை உருவாக்கியவர்கள்.

இந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற டாகர் சகோதரர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் நீங்கள் முதல் காணொளியில் கேட்ட சிவஸ்துதியை பாடிய டாகர் சகோதரர்களின் குருமார்கள். அப்பாக்கள்.

அவர்களின் முழு பெயர் என்ன தெரியுமா?

ஜியா ஃபரிதுதீன் டாகர்

ஜியா மொஹிதுதீன் டாகர்.

இவர்கள்தான் அந்த "சிவஸ்துதி"யை முதலில் உருவாக்கி பாடியவர்கள்.

அவர்களின் வாரிசுகள் பாடிய காணொளிதான் மேலே உள்ளது.

அவர்களின் முழுப் பெயர்கள்

நசிர் ஜாஹிருதுதீன் டாகர்

நசிர் ஃபயாசுதின் டாகர்

இவர்களிடமிருந்து த்ரூபத் இசையை கற்றுக் கொள்ள வந்தவர்கள்தான் குண்டேச்சா சகோதரர்கள்.அவர்களின் முழு பெயர்

ராமகாந்த் குண்டேச்சா மற்றும் உமாந்த் குண்டேச்சா 

அவர்களிடமிருந்து டாகர் பரம்பரையைச் சேர்ந்த இளைஞர்கள் இப்போது த்ரூபத் பாணியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் யாரோ ஒருவர் டாகர் வாணி பாணியைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல, அது "வீரா ராஜ வீரா" பாடலாக உருவாகிவிட்டது.

ஏதோ அற்புதம்னு தலைப்பில் இருக்கே! அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.

இந்துக்களின் கடவுளான சிவனை வணங்குவதற்கான "சிவ ஸ்துதி"யை உருவாக்கி அதனை பல தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்கள் இஸ்லாமியர்கள். 

அந்த இஸ்லாமிய டாகர் சகோதரர்களை குருவாக தேடி வந்தவர்கள் இந்துக்களான குண்டேச்சா சகோதரர்கள்.

அவர்களிடம் மீண்டும் பயில வந்தது அதே டாகர் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்.

இது எவ்வளவு அழகாக இருக்கிறது!

இசைக்கு ஜாதி, மதம், இனம். மொழி என எதுவும் கிடையாது என்பதை நிரூபிக்கும் இந்த குரு சிஷ்ய பரம்பரை ஒரு அற்புதமில்லையா? இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு நல்லதொரு உதாரணமில்லையா!

இந்த பன்முகக் கலாச்சாரத்தை யாரும் சிதைக்காமல் பாதுகாப்போம்.



பிகு :அடிப்படையில் இந்த பாடல் "அடாணா" ராகத்தில் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த ஒரு அடாணா ராக திரைப்பாடல் கீழே. காபிரைட் சர்ச்சை வராது என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன், இரண்டு காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் எந்த லாப நோக்கமும் கிடையாது. இந்த பாடலை ஒரிஜினலாக எழுதியவர் காபிரைட் வழக்கு போட இப்போது இல்லை. அவர் தியாகராஜர். 




டுபாக்கூர் சமூக ஆர்வலர்கள் தொல்லை ஓவராயிடுச்சு

 


நேற்றிலிருந்து பாஜக=அதிமுக கூட்டணியினர் ரொம்ப பெருமையோடு பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி கீழே . . .


இந்த மனிதனை ஒரு டுபாக்கூர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது மகளிர்  உரிமைத் தொகை.

யாருடைய பணத்தை இவர் திருப்பி அனுப்பினார்?

தாய்?

மனைவி?

சகோதரி?

மகள்?

மற்றவர்களுக்கு உரிமையான தொகையை திருப்பி அனுப்ப இவருக்கு ஏது உரிமை?

அடுத்தவர் பணத்தை எடுத்து தனக்கு பெயர் வாங்கிக் கொள்ள நினைத்த இந்த மனிதர் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விட்டார்.

விண்ணப்பம் கொடுக்காமல் மகளிர் உரிமைத் தொகை வராது. ஆக இவர் குடும்பத்தில் யாரோ கொடுத்த விண்ணப்பத்தினால்தான் பணமே வந்தது என்பது கூட தெரியாத இவரை டுபாக்கூர் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

மேலும் இத்தனை நாள் வந்த பணம் என்ன ஆனது?


Sunday, February 15, 2026

அடடே! இதுதான் தலைமைப்பண்பா விஜய் 😆😆😆😆


தவெக உறுப்பினர்களை தற்குறிகள் என்று சொல்வது மிகவும் சரி என்பதை கீழேயுள்ள காணொளி உணர்த்தும்.


நல்லா டான்ஸ் ஆடுவதுதான் தலைமைப் பண்பு என்றால் தமிழ்நாட்டில் தலைமைப் பண்பு கொண்டவர்கள் நிறைய பேற் இருக்கிறார்கள் அல்லவா! திரைத்துறையிலேயே விஜய்யை விட பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் கூடுதல் தலைமைப் பண்பு கொண்டவர்கள். பாவம் கே.பாக்கியராஜிற்குத்தான் தலைமைப் பண்பே கிடையாது அல்லவா 😜

விஜய் நன்றாக நடனமாடக்கூடிய ஒருவர் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். .  பிகில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களில் பாடல்கள் இல்லாமல் வெறும் இசைக்கு மட்டும் விஜய் ஆடிய நடனங்களை ஒப்பிட்டால் இந்த காணொளியில் மேடையில் ஆடும் நடனம் ரொம்பவே சுமார்தான். விஜயின் தலைமைப் பண்பு குறைந்து வருகிறது போல . . .

Saturday, February 14, 2026

இந்தில பேசினா தப்பாத்தான் வரும்

 


இனிமேல் தமிழ்நாடு, பாண்டிச்சேரி எல்லைக்குள் இந்தியில் பேசக் கூடாது என்று ஜண்டா அமித்ஷா முடிவெடுத்திருப்பார். கீழேயுள்ள காணொளியை பாருங்கள், அமித்ஷா யாரை திட்டுகிறார் என்பதும் தெரியவில்லை, புதுவை முதல்வர் யார் என்பதும் தெரியவில்லை. இதுதான் அங்கேயுள்ள பாஜகவினரின் அரசியல் தரம். 

சரியான காமெடி இது.



அந்த பதவிக்கு அவர் அருகதையில்லை . . .

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை. 

அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி  நீங்கலாக  அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஓம் பிர்லா?

ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு. 

12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.

இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.

பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . . 


 

Friday, February 13, 2026

5000 ரூபாயால் சங்கிகள் கதறல் . . .

 


மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஒரு அதிரடி யுக்தி. பாஜக-அதிமுக கூட்டணி சதி செய்தார்களோ, சதி செய்யவில்லையோ, இந்த முடிவால் அவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

பீகாரிலும் மகாராஷ்டிராவிலும் பாஜக பயன்படுத்திய ஆயுதம் அவர்களையே தமிழ்நாட்டில் திரும்பத் தாக்கியுள்ளது.

பாஜகவினரின் கதறல் ஓசை காதுக்கு இனிமையாக இருக்கிறது என்பதும் உண்மை.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளின் கதறலை கீழே பாருங்கள்.












சங்கிகளிடம் இயல்பாகவே இருக்கிற பெண்களுக்கு எதிரான மனப்பான்மையையும் நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை மாற்ற பாஜக-அதிமுக கூட்டணி எந்த அளவிற்கும் கீழிறங்கும். கலவரத்தை தூண்டினால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. 

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

Thursday, February 12, 2026

தெனாலி கமல் என்னை மன்னிக்க

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பணியில் இருக்கும் போது சரி, பணி ஓய்விற்குப் பிறகும் என்ன எழுதுவதாக இருந்தாலும் அவர்கள் அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு அதனை படித்து ஒப்புதல் கொடுத்த பிறகுதான் வெளியிட வேண்டும். இது மோடி அரசு நேற்று போட்டுள்ள உத்தரவு.

இந்த உத்தரவே  முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற நூலைக் கண்டு மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று.

மோடியின் பயங்களை நினைத்தேன். தெனாலி படத்தில் கமல் பட்டியலிடும் பயங்கள்தான் நினைவுக்கு வந்தது. வேறு வழியில்லை. அந்த காட்சியைத்தான் சுட வேண்டியிருந்தது.



 

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


இன்று இந்தியா முழுதும் இந்தியாவை நேசிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி போன்ற மத்திய தொழிற்சங்கங்களும் இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அகில இந்திய அமைப்புக்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

காலம் காலமாக உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கின்றன மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள்.

சிக்காகோ தொழிலாளர்கள் உயிர் கொடுத்து வென்றெடுத்த எட்டு நேர வேலை நேரத்தை காவு கொடுக்கிறார்கள்.

நிரந்தர வேலை என்பதையே கடந்த காலமாக மாற்றி ஒப்பந்த தொழிலாளர்கள் முறையும் குறிப்பிட்ட கால நிர்ணய பணி என்பதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் செயலாகும்.

வங்கி, இன்சூரன்ஸ் மற்றுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தை பாழுங்கிணறுக்குள் தள்ளும் மூடத்தனம்.

இந்திய உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் என்ன தவறு செய்தாலும் சட்டப்படியே கண்டு கொள்ளாத கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

இதற்கு எதிராகத்தான் இன்று வேலை நிறுத்தம்.

எல்.ஐ.சி யின் இன்னும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

மூன்றாம் பிரிவு, நான்காம்  பிரிவு பணிகளில் புதிய பணி நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பணிச்சுமை ஒரு புறம் அதிகரித்து வரும் வேளையில் மறு புறம் பணி ஓய்வுகளின் காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை சரி செய்ய நிர்வாகம் சுணக்கம் காண்பிக்கிறது.

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷனே தரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோடிக்கணக்கான தொழிலாளர்கள், போராட்ட களம் புகுகின்றனர். போராட்டங்கள் என்றைக்கும் தோற்றது கிடையாது.

பணி ஓய்வு பெற்றதால் நேரடியாக வேலை நிறுத்தப் பங்கேற்பு என்பது கிடையாது.  எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தோழர்களிடமிருந்து  உற்சாகத்தைப் பெற . . .

Wednesday, February 11, 2026

தின மலர் மீது கேஸ் போடுமா அனாமதேய சங்கி?

 


இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் பேசியதை கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று இரவு அதற்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. 

Any one can file case on this post, because you are posting some thing not verified and personal. I will forward this to bjp it cell for handling your fake messages.

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு பின்னூட்டம். 

அந்த அனாமதேயம் பாஜக ஐ.டி விங்கிற்கு அனுப்பிய கடிதத்தை எனக்கு பின்னூட்டமாக போட்டிருந்தது. அந்த கடிதத்திலும் பெயர் இல்லை, மொட்டைக் கடிதம் போல.

அதன் பின்பு ஒரு பதில் எழுதினேன்.

சர்சங்சாலக் பற்றிய பதிவு தொடர்பாக மிரட்டியுள்ள சங்கிக்கு ஒரு தகவல். அந்த தகவல் தவறென்றால் அதற்கு பொறுப்பு சங்கிப் பத்திரிக்கையான தின மலர் தான். அதிகம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல சங்கிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். அதனால் இது சங்கிகளின் நிலைப்பாடுதான். எனக்கு எந்த பயமும் இல்லை. அதனால்தான் வெளிப்படையாக பதிவிட்டுள்ளேன். என்னை மிரட்டிய சங்கிதான் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விட்டது.

அதன் பின்பு அந்த சங்கியிடமிருந்து எந்த பின்னூட்டமும் இதுவரை இல்லை. 

பாவம் அந்த சங்கி தன் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் போல. 

அது அனுப்பிய கடிதத்தையும் அதற்கான எதிர்வினையையும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

மோகன் பகவத் சொன்னதாக நான் எழுதியிருந்தது பொய்ச் செய்தியா?

நான் அதனை எடுத்ததே தின மலரின் ட்விட்டர் (X) பக்கத்திலிருந்துதான்.

அந்த பக்கத்திற்கெல்லாம் நானாக செல்வதில்லை. ட்விட்டரே காண்பிப்பதுதான்.

ட்விட்டரில் மட்டும் தின மலர் வெளியிடவில்லை. தினமலர் தன் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தது.



இத்தோடு நிற்கவில்லை.

தின மலரின் இணைய தளத்திலும் இருக்கிறது.


ஆகவே இந்த செய்தி பொய்ச்செய்தி என்றால் அந்த சங்கி தினமலர் மீதுதான் வழக்கு போட வேண்டும். 

நான் சொன்ன பக்கங்களில் தேடிப்பார்த்து வழக்கு போடட்டும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுட்ட காணொளியை அஸ்ஸாம் மாநில பாஜக நீக்கியது போல தின மலரும் நீக்கியிருந்தால் . . .

அந்த அனாமதேயேம் தன் உண்மையான அடையாளத்துடன் என்னை அணுகினால் நான் வேண்டுமானால் நான் எடுத்து வைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்களை அனுப்பி வைக்கிறேன்.

சங்கிப் பத்திரிக்கை தின மலர் மீது வழக்கு தொடுக்கும் தைரியம் அந்த அனாமதேய சங்கிக்கு உண்டா அல்லது அது முறையிட்டுள்ள பாஜக ஐ.டி விங்கிற்குத்தான் உண்டா?

பைத்தியக்காரப் பசங்க!!!!