கலைஞர் காலத்திலும் பின்பு எம்.ஜி.ஆர் காலத்திலும் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பாக "எம்.ஜி.ஆர் அதிமுக" என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.
எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
நெய்வேலியில் நான் பணியாற்றி வந்த போது ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. பெரும்பாலும் அது பண்ருட்டி ராமச்சந்திரன் புகழ் பாடும் கூட்டமாகவே அமைந்திருந்தது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெ-ஜா அணிகள் பிரிந்த பின்னர் நடந்ததால் அந்த அரசியல் தொடர்பான பேச்சுக்கள் திருமணத்திலும் ஒலித்தது. "நம்மவரின் பெருமை, அருமை பற்றி இந்தம்மாவிற்கும் தெரியலை, அந்தம்மாவிற்கும் தெரியலை. அந்த அம்மாவிற்கு மட்டும்தான் புரியும்" என்று ஒருவர் பேசினார். அந்த அம்மா யார் தெரியுமா? இந்திரா காந்தி. . .
அப்படியெல்லாம் இருந்த பண்ருட்டியார் பின்பு பா.ம.க, தனிக் கட்சி, பின்பு திமுக, மீண்டும் அதிமுக, என்றெல்லாம் கட்சி மாறி கடைசியில் ஓ.பி.எஸ் அணி என்று வலம் வந்து 88 வயதில் தனிக்கட்சி துவங்கியுள்ளார்.
உலக வரலாற்றிலேயே 88 வயதில் தனிக்கட்சி தொடங்கியவர் இவர்தான்.
இந்த மன தைரியத்தைப் பாராட்டி குறைந்த பட்சம் அவருக்கு பண்ருட்டி தொகுதியில் டெபாசிட்டாவது மக்கள் கொடுக்க வேண்டும்.
பிகு: எம்.ஜி.ஆர் காலத்து மந்திரி ஹெச்.வி.ஹண்டே போல பாகஜகவில் சங்கமிக்காமல் பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவரை பாராட்ட வேண்டும்.


No comments:
Post a Comment