கடவுள் இட்ட கட்டளைப் படி நீதிபதி சந்திரசூட் எழுதிய தீர்ப்பில் இரண்டு அம்சங்கள். ஒன்று எவர் பாபர் மசூதியை இடித்தார்களோ அவர்களிடமே கோயில் கட்ட அந்த இடத்தை கொடுப்பது. அயோத்தியிலிருந்து சற்று தள்ளி ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட கொடுப்பது.
அதில் முதல் அம்சம் முடிந்து விட்டது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலை மோடி திறந்து வைத்து விட்டார். இரண்டாண்டுகள் முடிந்து விட்டது.
மசூதி என்னாயிற்று?
இதுதான் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அயோத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் என்ற கிராமத்தில் உள்ளது.
இங்கே மசூதி கட்ட முதலில் உருவாக்கப்பட்ட வரைபடங்களில் மசூதி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்ததால் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்கு பிறகு வேறு ஒரு மாதிரி தயாரித்தாலும் அதற்கு அனுமதி தர ஆயிரத்தெட்டு தடைகள். பாபரின் பெயரால் ஒரு மசூதி உருவாவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று மொட்டைச்சாமியார் கூறிய காரணத்தால் புதிய மசூதியின் பெயரே முகமது-பின்-அப்துல்லா என்றுதான் அமையவுள்ளது.
எப்போது கட்டிடப் பணி தொடங்கும்? எப்போது முடியும்? எப்போது திறக்கப்படும்?
மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம் . . .


No comments:
Post a Comment