Tuesday, February 3, 2026

அதாம்லே நிர்மலா சீத்தாராமன் !

 


நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு கீழே உள்ளது.


கடலே இல்லாத வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் மையம் எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கிண்டலடித்துள்ளார்கள்.

ஐடியா இல்லாத ஆளுங்க!

அவங்களுக்கு நிர்மலா அம்மையாரின் ப்ளானே தெரியலை.

வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் சென்டருக்கு கப்பல் வர வேண்டும். அதனால் அருகிலிருந்த கடலிருந்து கப்பல்கள் செல்லும் அளவிற்கு மிகப் பெரிய கால்வாய்கள் தோண்டப்படும். சேது சமுத்திர திட்டத்தை இவர்கள் சீரழித்தாலும் இதனை செயல்படுத்துவார்கள். 

அந்த கால்வாய்கள் தோண்டுவதற்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிக்கு வழங்கப்படும்.

அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அதானி, அம்பானிக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் கடன் தரும்.

எப்படி விமான நிலையங்களும் துறைமுகங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அது போல கப்பல் ரிப்பேர் சென்டர்களும் அதானிக்கு வழங்கப்படும். 

அதை வாங்குவதற்கான பணம்?

எதற்கு இருக்கின்றன அரசு வங்கிகள்!

வாங்கிய கடனை அதானி எப்படியும் திருப்பி கட்ட மாட்டார். அதனால் சில வருடங்கள் கழித்து அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். 

அதானி, அம்பானிக்கு கொடுக்க எதுவும் இல்லாத போது இப்படி எதையாவது புதிதாக உருவாக்கித்தானே தர வேண்டும்!

அதனால்தான் கப்பல் ரிப்பேர் சென்டர்.

அங்கதான் நிக்கறாங்க நிர்மலா சீத்தாராமன். 

No comments:

Post a Comment