சென்னையில் பேராசான் காரல் மார்க்ஸின் சிலை கம்பீரமாக எழுந்துள்ளது.
காரல் மார்க்ஸின் சிலை சங்கிகளுக்கு பதற்றத்தையும் எரிச்சலையும் அளித்திருக்கிறது.கண்ட இடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இந்தி இசை அம்மையாரின் ஒப்பாரி ரொம்பவே அதிகமாக இருக்கிறது.
அந்த அறிவு கெட்ட அம்மையாருக்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்வது வீண்.
தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறு சில அமைப்புக்களும் கார்ல் மார்க்ஸை மறக்காத காரணத்தால்தான் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.
ஆனால் இந்தியிசை அம்மையார்தான் கலைஞர் ஆட்சியில் தமிழறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படித்தார் என்பதை மறந்து விட்டார்.
அடுத்தவர் தயவில் வாழும் அளவிற்கு தன் வாழ்க்கைக்கு காரணமான தந்தையையே மறந்து விட்டார்.
குமரி அனந்தனின் கௌரவத்தை மீட்டெடுக்க திமுக அரசுதான் அவருக்கு வீடு கொடுத்தது என்பதையும் மறந்து விட்டார்.
பாவம்!
அப்புறம் முருகனை கும்பிட முடியவில்லையா? அறுபடை வீடுகளை மூடி விட்டார்களா என்ன? கோயில்களில் எப்போதும் பக்தர்கள் எப்போதும் போல வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
முருகனை வைத்து கலவரம் செய்த நினைத்த சங்கிகள்தான் அசிங்கமாக நிற்கிறார்கள், முருகன் அணிந்த அந்த ஒற்றை ஆடை கூட இல்லாமல் . . .



No comments:
Post a Comment