Tuesday, February 24, 2026

சிந்துபைரவி பென்ஷன் காமெடியும் தவெக தற்குறிகளும்

 


சிந்துபைரவி திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை முதலில் பாருங்கள்.


மத்தியரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ள எட்டாவது ஊதியக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் (TERMS OF REFERENCE) என்பதில் ஓய்வூதியங்களை மாற்றி அமைப்பது என்பது இடம் பெறவில்லை. அதனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய தர்ணாவில் வேலூரில் நான் பங்கேற்றேன். தர்ணாவை நிறைவு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அப்போது நான் இந்த திரைப்படக் காட்சியை குறிப்பிட்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தில் பென்ஷனை நிறுத்துவது என்ற கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ அதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு மோசமானவர்கள் என்று பேசினேன்.

நேற்று வேறொரு காணொளியைக் கண்டேன்.

அது எங்கள் வேலூரில் சொல்லப்பட்டது என்பது ஒரு பெரிய கொடுமை.

அந்த கொடுமையை நீங்களும் பாருங்கள்.


தப்பித் தவறி, ஒரு மோசமான விபத்தாக இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருமானால்  வயதானவர்களின் வாக்குரிமையை மட்டுமல்ல உயிர் வாழும் உரிமையைக் கூட பறித்து விடும் போல . . .

இப்படிப்பட்ட மோசமான புரிதல் காரணமாகத்தான் விஜய்யையும் அவர் கூட்டத்தையும் தற்குறிகள் என்று சொல்கிறோம். தாங்கள் ஏன் தற்குறிகளாக இருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அவர்கள். 

No comments:

Post a Comment