Monday, February 2, 2026

மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .


 பாஜகவினர் இன்று மரண பயத்தில் நடுங்கிப் போய் விட்டனர். 

முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

அப்படி என்ன எழுதப்பட்டுள்ளது?

ஆகஸ்ட் 31, 2020 அன்று இரவு 8:15 மணிக்கு, சீனாவின் ஆர்மி மற்றும் அதன் நான்கு சீன டாங்கிகள் லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி முன்னேறி வருகின்றன! அவை ஏற்கனவே இந்திய எல்லையில் சில நூறு மீட்டருக்குள் வந்து விட்டன.

இந்திய ராணுவத் தளபதி, ஜெனரல் நரவனே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர அழைப்புகளை விடுத்து நமது ராணுவத்தை உடனே முன்னேறி, சீனாவின் ராணுவத்தை தடுத்து நிறுத்த அனுமதி கேட்கிறார்!
“நாங்கள் உத்தரவு தரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்” என்று டெல்லியில் இருந்து கட்டளை வருகிறது! சீனராணுவம் தொடர்ந்து முன்னேறுகிறது! நமது ஆர்மி கமாண்டர் உச்ச கட்ட டென்ஷனில் என்ன செய்வதென்று தெரியாது விழி பிதுங்குகிறார்!
சீனர்கள் அவர்களது படைகள் முன்னேறி வருகின்றன! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துக்கு அவர் மீண்டும் மீண்டும் வெறித்தனமான அழைப்புகள் அனுப்புகின்றார் .
ஆனால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமையிடமிருந்து எந்த தெளிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் டெல்லியில் இருந்து வரவில்லை!
சாத்தியமான அனைத்து வழிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கேட்டு எல்லையில் ராணுவ கமாண்ட் அலறுகிறது! ஆனால் ராணுவத் தளபதிக்கு இன்னும் தெளிவான நிர்வாக உத்தரவுகளை டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசாங்கக் குழு எந்த உத்தரவும் தராமல் மௌனம் காக்கிறது!
ஒருவழியாக இரவு 10:30 மணிக்கு, பிரதமரிடம் பேசிய பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி நரவனேவைத் திரும்ப அழைத்து, பிரதமரின் அறிவுறுத்தல் படி,
“உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அப்படிச் செய்து கொள்ளுங்கள்! என்று பொறுப்பில்லாத பதிலைத் தருகின்றார்!

ஆனால் அதற்குள் சீனாவின் ராணுவம் நம்மை ஒரு வழி பண்ணி விட்டது!

ராகுல் காந்தியை பேச விடாமல் எப்படி தடுக்கிறார்கள் என்பதை கீழே உள்ள காணொளியை பாருங்கள்.


குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல பாஜகவினர் தயாராக இல்லை. மாறாக பத்திரிக்கையில் சொல்லியதை படிக்கக் கூடாது. பிரசுரிக்கப் படாத புத்தகத்தை படிக்கக் கூடாது என்றெல்லாம்தான் பம்மாத்து செய்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்,

மோடி ஒரு வெற்று வேட்டு. யாரைக் கண்டாலும் நடுங்கிப் போவார் என்று.

அதனால்தான் ஒட்டு மொத்த பாஜகவினரும் "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க பரமா" என்று கதறுகிறார்கள்.

இன்னும் கூட அவர்கள் கதறுவார்கள்.

பிகு" நீல நிறத்தில் இருப்பதை மதுரை தோழர் பகத்சிங்க் அவர்களின் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.

No comments:

Post a Comment