Wednesday, February 25, 2026

கல்கோட்டியா நாய் ரோபோ - வட போச்சே மோடி

 


சீனாவிலிருந்து இறக்குமதி செய்த நாய் ரோபோவை தங்களுடைய திறன் மையம் உருவாக்கியது என்ற டுபாக்கூர் பீற்றல் அம்பலப்பட்டு அசிங்கப் படாமல் போயிருந்தால் ????

இது என் கற்பனை . . .

ஏஐ மாநாட்டின் இறுதி நாளன்று கல்கோட்டியா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பார்கள்.

எங்கள் ஓரியான் நாய் ரோபோவை கண்டு பிடித்த விஞ்ஞானி யார் தெரியுமா? 

"பனிரெண்டாம் வகுப்பு படிக்கையிலேயே ரோபோவை உருவாக்கிய பிரதம மந்திரிதான் இந்த ரோபோவையும் வடிவமைத்தார்"

அரங்கம் எப்படி அதிர்ந்திருக்கும்!

சங்கிகள் எப்படியெல்லாம் கூச்சலிட்டிருப்பார்கள்!

அது மட்டுமா?

மோடியின் கண்டுபிடிப்புக்கள் என்று எவ்வளவு பெரிய பட்டியல் வந்திருக்கும்?



எந்திரன் சிட்டியைக் கூட அவர்தான் தயாரித்தார் என்று ஷங்கரைக் கூட சொல்ல வைத்திருக்கலாம்.

டுபாக்கூர் பல்கலைக்கழகம் மாட்டிக் கொண்டதால்

மோடி பாவம்! 

வட போச்சே !!!!

No comments:

Post a Comment