சமூக வலைத்தளக் காலம் வந்ததிலீருந்தே ஒரு மோசமான போக்கு உருவாகி விட்டது.
"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று தொலைக்காட்சிகள் அறிவிப்பது போல
பல செய்திகளை தாங்கள்தான் முதலில் தெரிவித்தோம் என்று பெருமை பெற பலரும் ஆசைப்படுகிறார்கள்.
மொக்கை செய்தி தொடங்கி மரணச் செய்தி வரை முதலில் தெரிவித்து R.I.P போடுவதில் பயங்கர ஆர்வம்.
அதிலும் ஆளுமைகள் யாராவது மோசமான நிலைமையில் இருந்தால் அந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது.
ஜெ விஷயத்தில் அந்த வேலையை ரங்கராஜ் பாண்டே செய்தார்.
தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நேற்று முன் தினமே ஆர்.ஐ.பி போட ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படித்தான் டிசம்பர் இறுதியில் இயக்குனர் பாரதிராஜா பற்றி வதந்தி பரப்பினார்கள். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில்தான் உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் செயல்படுவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
நீங்கள் பதிவிடும் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு பதியுங்கள்.
நீங்கள் ரங்கராஜ் பாண்டே கிடையாதல்லவா, வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாமல் முதலைத் தோலுடன் செயல்பட . . .
.jpg)
No comments:
Post a Comment