பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சிறையில் இருப்பது நாம் அறிந்ததே. அவருடைய பார்வைத் திறனில் 85 % ஐ இழந்து விட்டார் என்றும் சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை என்றும் காலையில்தான் படித்தேன்.
இப்போது வந்த ஒரு செய்தி நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த . ஒரு மகளிர் அணி கேப்டன் உட்பட முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு பெருமை சேர்த்த இம்ரான் கானுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான, கௌரவமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.
நம் இந்திய அணியின் அடையாளங்களாக திகழும் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் கையெழுத்திட்ட இக்கடிதத்தில் உலகப் புகழ் பிரபலங்கள் கிளைவ் லாயிட், கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.
அந்த கடிதம் இங்கே
We,
the undersigned former captains of our national cricket teams, write with deep
concern regarding the reported treatment and incarceration conditions of Imran
Khan, the distinguished former Captain of Pakistan and a legendary figure in
world cricket. Imran Khan’s contributions to the game are universally admired.
As captain, he led Pakistan to their historic 1992 Cricket World Cup victory—a
triumph built on skill, resilience, leadership, and sportsmanship that inspired
generations across borders.
Many
of us competed against him, shared the field with him, or grew up idolising his
all-round brilliance, charisma, and competitive spirit. He remains one of the
finest all-rounders and captains the sport has ever seen, earning respect from
players, fans, and administrators alike. Beyond cricket, Imran Khan served as
Prime Minister of Pakistan, leading his nation during a challenging period.
Regardless of political perspectives, he holds the honour of having been
democratically elected to the highest office in his country.
recent reports concerning his health –
particularly the alarming deterioration of his vision while in custody and the
conditions of his imprisonment over the past two and a half years have caused
us profound concern. As fellow cricketers who understand the values of fair
play, honour, and respect that transcend the boundary rope, we believe that a
person of Imran Khan’s stature deserves to be treated with the dignity and
basic human consideration befitting a former national leader and a global sporting
icon.
We
respectfully urge the Government of Pakistan to ensure that Imran Khan
receives: Immediate, adequate and ongoing medical attention from qualified
specialists of his choosing to address his reported health issues. Humane and
dignified conditions of detention in line with international standards,
including regular visits by close family members. Fair and transparent access
to legal processes without undue delay or hindrance.
Cricket
has long been a bridge between nations. Our shared history on the field reminds
us that rivalry ends when the stumps are drawn – and respect endures. Imran
Khan embodied that spirit throughout his career. We call on authorities to
honour it now by upholding the principles of decency and justice. This appeal
is made in the spirit of sportsmanship and common humanity, without prejudice
to any legal proceedings.
இரண்டு அம்சங்களில் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது.
காலமெல்லாம் தங்களோடு விளையாட்டில் மோதிய ஒருவருக்கு பிரச்சினை என்று வருகிற போது நாடு மறந்து அவருக்காக குரல் கொடுக்க ஒன்று சேர்ந்தது முக்கியமான ஒன்று.
அடுத்த அணி வீரர்களுக்கு கை கொடுக்கக்கூடாது என்று வெறுப்பரசியலை இந்திய கிரிக்கெட்டை நிர்வாகம் செய்யும் பாஜகவினர் புகுத்தியுள்ள சூழலில் இம்ரான் கானிற்காக கவாஸ்கரும் கபில்தேவும் குரல் கொடுத்துள்ளது இன்றைய கிரிக்கெட் அணியினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
நேர்மையாக, நாகரீகமாக, நட்புணர்வோடு நடந்து கொள்வதைத்தான் கிரிக்கெட் உணர்வு என்பார்கள்.
அது இன்று அருகி வரும் நிலையில் இந்த கடிதம் கிரிக்கெட் உணர்வை புதுப்பித்துள்ளது.

அருமையான பதிவு தோழர்
ReplyDeleteபதிவின் நோக்கம் புரியாமல் ஒரு அனாமதேயம், ஜாதி வெறி, கம்யூனிச வெறுப்போடு ஒரு அபத்தமான பின்னூட்டத்தை இட்டுள்ளது. அநேகமாக சீமானின் தம்பி வகையறா போல தெரிகிறது. அது அதே பின்னூட்டத்தை கோழை போல ஒளிந்து கொள்ளாமல் சொந்த அடையாளத்தோடு போட்டால் சூடாக பதில் அளிப்பேன்.
ReplyDelete