நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (Collegium) மிக மிக மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகளை அலகாபாத் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதிகளாக இரண்டாண்டு காலத்திற்கு நியமித்துள்ளார்கள்.இதன் பொருள் என்ன?
புதிதாக நீதிபதிகளை தீர்ந்தெடுக்க உங்களுக்கு மனமில்லையா இல்லை புதிய நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி உள்ளவர்கள் மொட்டைச் சாமியாரின் உபி மாநிலத்தில் யாரும் இல்லையா?
மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துப் போகக் கூடிய நீதிபதிகளை புதிதாக கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக பழையவர்களே வசதி என்று நினைத்தார்களோ!
ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது என்பது அரசுத் துறையோ இல்லை வேறு நிறுவனமோ மிக மிக மோசமானது. இளைஞர்களுடைய வாய்ப்பை பறிக்கிற அராஜகம்.
இது மிக மிக மோசமான உதாரணம். . . .


No comments:
Post a Comment