பாஜகவின் பெரிய சங்கி எச்.ராசா ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மேடையில் சரிந்து விழும் போது திமுக வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய மருத்துவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திமுக கொண்டு வந்த தமிழறிஞர் இட ஒதுக்கீட்டுத் திட்டம் மூலம் மருத்துவரான தமிழிசை அம்மையார் அவர்களும் தலையிட்டுள்ளார்.
தமிழிசை நீங்கலாக மற்றவர்களும் தலையிட்டுள்ளது காணொளி ஒன்றில் தெளிவாக தெரிகிறது.
எச்.ராசாவிற்கு மற்றவர்கள் உதவியதை பார்த்த சிலர் பதிவிட்டுள்ளனர். முதல்வர் சென்ற வாகனத்தின் டயர் வெடித்த போது அது முருகன் செயல் என்று உரக்கச் சிரித்த சங்கிகள் போல யாரும் எதுவும் எழுதவில்லை. தமிழ்நாட்டின் மனித நேய மரபை உணர்ந்து இனியாவது எச்.ராசா வெறுப்பரசியலை கைவிடுவார் என்ற நம்பிக்கையைத்தான் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் சங்கிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தலைவருக்கு ஒரு இஸ்லாமியரும் காங்கிரஸ் பெண்மணி ஒருவரும் உதவினார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சில்லறை சங்கிகள் மட்டுமல்ல பெரிய சங்கி தமிழிசை கூட உண்மைகளை மூடி மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியதாக கதை விடத் தொடங்கினர்.
முதல்வர் சென்று நலன் விசாரித்ததைக் கூட கொச்சைப்படுத்தி உள்ளனர்.
சங்கிகள் மனித நேயம் என்பதற்கு அர்த்தம் தெரியாத, எந்த நாகரீகமும் அற்ற காட்டுமிராண்டிகள்,
நாளை எச்.ராசா நலம் பெற்று வந்தால் கூட விஷம் போல வெறுப்பைத்தான் கக்குவார்.
அவர்கள் அனைவருமே என்றுமே திருந்தாத ஜந்துக்கள்.

No comments:
Post a Comment