சுசீந்திரம் தேர்த்திருவிழாவில் "பாரத் மாதாக்கீஜே" என்று "சாவர்க்கர் வாழ்க" என்று கோழை செல்பி சாவர்க்கரை வாழ்த்தியும் கூச்சல் போட்ட சங்கிகளைப் பார்த்து பேசிய வார்த்தைகள் அநாகரீகமானவை. அமைச்சர் என்ற பதவிக்கு பொருத்தமானதும் அல்ல. ஒன்றும் இல்லாத விஷயத்தையே மிகைப்படுத்தி பூதாகரமாக்கி சர்ச்சைகளை உருவாக்க சங்கிகள் அலையும் போது அவர்களுக்கு அவல் கொடுத்தது மூடத்தனமும் கூட.
இதே போல்தான் திருத்தணியில் வட மாநில வாலிபர் வெட்டப்பட்ட போது தமிழ்நாட்டில் கஞ்சா 0 என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னதெல்லாம் எரிச்சலூட்டும் ரகம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பின்னடைவு வருமானால் அதற்குக் காரணம் சேகர்பாபு, மா.சு போன்ற பொறுப்பற்ற அமைச்சர்கள்தான் என்று இப்போதே சொல்லி விட முடியும்.
ஆமாம், சங்கிகளா, சுசீந்திரம் கோயிலுக்கும் கோழை சாவர்க்கருக்கும் என்னங்கடா சம்பந்தம்? "ஓம் காளி, ஜெய் காளி" , "ஜெய்ஸ்ரீராம்" போல "பாரத் மாத்தாக்கீஜே" என்பதையும் கலவர முழக்கமாக்கி விட்டீர்களே

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்களை மறந்துவிட்டர்களா!
ReplyDelete