Monday, January 12, 2026

புவனேஸ்வர் போனாலும் ....

 


காசிக்கு போனாலும் கர்மம் தொலையாது என்பார்கள். அது போல புவனேஸ்வர் போனாலும் தெரு நாய்களின் தொல்லை நீங்கவில்லை.


எங்கள் அகில இந்திய மாநாட்டிற்காக புவனேஸ்வர் சென்ற போது நாங்கள் KIIT என்ற பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்க வைக்கப் பட்டிருந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி தெருநாய்களின் சுதந்திரமான திரிதலுக்கு உரிமை கொடுக்கப்பட்ட இடம் போல.

விடுதியின் வாசலில் எவ்வளவு சொகுசாக அவை தூங்குகிறது பாருங்கள்.


அந்த விடுதியின் வார்டன் தெருநாய் புரவலர் போல. தூங்கிக் கொண்டிருக்கும் நாய்களை யாரும் எழுப்பக் கூடாது என்பதற்காக பிரதான கதவை பூட்டி விட்டு ஓரத்தில் இருந்த சின்ன கதவு வழியாக எங்களை போக வைத்தார்கள்.

இந்தியா முழுமைக்குமான பிரச்சினை இது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடிந்தாலும் தெருநாய்களை ஒழிக்க முடியாது போல . . 

பிகு: மேலே உள்ள படம் புவனேஸ்வரில் 01.01.2026 அன்று காலை 8.45 மணிக்கு எடுக்கப்பட்டது. அவ்வளவு மூடுபனி . . . .

No comments:

Post a Comment