இந்திய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைப்பது மூட நம்பிக்கை எனும் வகையில் இன்று இரண்டு வேறுபட்ட தீர்ப்புக்கள் வந்துள்ளன.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டி விட்ட அனுராக் தாகூர் எம்.பி யாகவும் கபில் மிஸ்ரா டெல்லி அமைச்சராகவும் சொகுசாக பவனி வரும் சூழலில் யுஏபிஏ சட்டத்தின் படி சிறை வைக்கப்பட்ட டெல்லி மாணவர் சங்கத் தோழர் உமர் காலித்திற்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நடத்த துப்பில்லாத ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக் கூட திராணியற்றதாகி விட்டது இன்றைய நீதித்துறை.
அதே நேரம் சீக்கியர்களின் ஒரு கோஷ்டியான தேரா சச்சா சௌதா எனும் அமைப்பின் சாமியாரும் பல்வேறு கொலை, பாலியல் கொடுமை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராம்ரஹீம்சிங் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள குர்மீத் சிங்கிற்கு நாற்பது நாட்கள் பரோல் கொடுத்துள்ளது.
அந்தாளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட ஐந்து வருடங்களில் பதினைந்தாவது முறையாக வழங்கப்படும் பரோல் இது. பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல், ஹரியானா சட்டப் பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய சமயங்களில் எல்லாம் நீதிமன்றம் நாற்பது நாட்கள் பரோலை தாராளமாக வழங்கியுள்ளது.
மோடி வகையறாக்களுக்கு தேவைப்படுமென்றால் கிரிமினல் சாமியாருக்கு பரோலை அள்ளி வழங்கும் நீதிமன்றம் உரிமைக்காக போராடுபவர்களை சிறையிலேயே அடைத்து மகிழ்கிறது.
கோர்ட்டுங்களா இவை?
மேலே உள்ள படத்தைப் பார்த்து நீங்களே பதிலை சொல்லிக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment