மத வெறியர்களுக்கு எதிராக எழுதியதால் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் சங்கிகளால் கொல்லப்பட்டார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அவரது கொலை நாடெங்கிலும் அதிர்ச்சியலைகளையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.
இன்று அவர் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட்டுள்ளார்.
ஆமாம்.
அவரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவனான, பிணையில் உள்ள ஸ்ரீகாந்த் பங்கர்கர், மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஜல்னா என்ற நகராட்சியில் கவுன்சிலராக சுயேட்சை வேட்பாளராக வென்றுள்ளான்.
இந்த முறை கௌரி லங்கேஷை அவன் மட்டும் கொல்லவில்லை. அவனுக்கு வாக்களித்த மக்களும் சேர்ந்து கொன்றுள்ளனர்.
கொலையாளிக்கு வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்,
மன்னிக்க முடியாத குற்றவாளிகள்


No comments:
Post a Comment