சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் மோடி அரசின் கலாச்சாரத்துறை அராஜகமாக செயல்பட்டு விருதுக்கான அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது.
இச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ் எழுத்தாளர்களுக்கு சர்வதேச அளவிலான விருதுகளை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது.
அந்த கோரிக்கை இன்று ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, வங்காளம் ஆகிய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் வருடம் தோறும் செம்மொழி விருது அளிக்கப்படும் என்றும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த முடிவை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். நன்றி சொல்கிறேன்.
இலக்கியத்தில் கூட கேடு கெட்ட சங்கி அரசியலை செய்யும் மோடி அரசின் செவிட்டில் விழுந்த அடி இது.
இதே போன்றதொரு கோரிக்கையை தானும் வைத்ததாக எழுத்தாளர் இமையம் முகநூலில் எழுதியிருந்தார்.
எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்டூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார்.
நச்சென்ற அந்த பின்னூட்டம் கீழே


No comments:
Post a Comment