பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று வஜனம் பேசிய விஜய், ஒன்றிய அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.
பாஜகவின் ஏற்பாடே விஜய் கட்சி என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தான் விஜயின் மௌனம் காண்பித்தது.
கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக விஜய்யை டெல்லிக்கு வருமாறு சி.பி,ஐ அழைத்துள்ளது.
விஜயின் கடைசிப் படம் என்று தற்காலிகமாக சொல்லப்படுகிற "ஜனநாயகன்" திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கவில்லை.
இந்த இரண்டு சம்பவங்களால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னதால் விஜய் பழி வாங்கப்படுகிறார் என்ற தோற்றத்தை இப்போது உருவாக்கப் பார்க்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் நேரடியாக இணைவதற்கு பதிலாக வேறு வழியில்லாத காரணத்தால் விஜய் கூட்டணியில் இணைந்து விட்டார் என்ற அனுதாபத் தோற்றத்தை உருவாக்க நடத்தப்படுகிற நாடகம் இந்த இரண்டு சம்பவங்கள் என்று நான் கருதுகிறேன்.
ஏனென்றால் பாஜக, அதிமுக, விஜய் என எல்லோருமே எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள்தான்.

No comments:
Post a Comment