Monday, January 12, 2026

அருவி மட்டும் உறையவில்லை . . .

 






மேலே உள்ள படங்கள் எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ட்ராங் என்ற நீர் வீழ்ச்சி. அதீத குளிரில் அருவி அப்படியே உறைந்து போய் விட்டது. பனிக்கட்டியாய் காட்சி அளிக்கும் அருவியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்களாம். இதுதான் செய்திகளில் சொல்லப்பட்டது.

சொல்லப்படாதது ஒன்று.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை எழாத வண்ணம் ஆட்சியாளர்களின் மூளை வெறுப்பால் உறைந்து போய் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி நினைவுக்கு வராத வண்னம் மத்தியரசு முற்றிலுமாக வன்மத்தால் உறைந்து போயுள்ளது.

காஷ்மீரின் அழகு கண்ணுக்குத் தெரிவது போல அதன் கண்ணீர் கண்ணுக்கு தெரியாதது பெருந்துயரம் . . .

3 comments:

  1. ’உரை’ என்பதை ‘உறை’ என்று திருத்தலாமே. விரும்பினால் செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன், நன்றி

      Delete