Thursday, January 15, 2026

தீவிரவாதிகள் அழகாகவே இருப்பார்கள்

 


புவனேஸ்வர் புறப்படும் முன்பாக இதற்கு முன்பாக கலந்து கொண்ட அகில இந்திய மாநாட்டு அனுபவங்கள் பற்றி எழுதியிருந்தேன்.

கட்டாக் போன போது கண்ட சில அனுபவங்களை எழுத தவறி விட்டேன். அவை இப்பதிவில் . . .

கட்டாக் மாநாடு முடிந்த பின்பு நெய்வேலியைச் சேர்ந்த நாங்கள் எழுவர் மட்டும் கொல்கத்தா சென்று பின்பு மும்பை போய் விட்டு திரும்பினோம்.

புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தா செய்ய முன்பதிவு செய்திருக்கவில்லை. இரவு பத்து மணி அளவில் கொல்கத்தா செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டி ஒன்றில் ஏற முயற்சிக்கிறோம். கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. தட்டு தட்டு என்று தட்டிய பிறகு எரிச்சலோடு திறந்தார்கள். பாதிப் பெட்டி முழுக்க போலீஸ் காரர்கள்தான். 

காலியிடத்தை தேடி அமர்ந்து எதிரில் பார்த்தால் எதிரில் ஒரு அழகான வாலிபன், மெலிந்த உருவம், நல்ல சிவப்பு நிறம், சின்னதாக மீசை, இருபத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும்.

எதற்கு இந்த வர்ணனை என்று கேட்கிறீர்களா?

அந்த பையனின் கைகளில் விலங்கு, கால்களிலும் விலங்கு, ஒரு சங்கிலியோடு சேர்த்து ரயிலோடு இணைத்திருந்தார்கள்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரரோடு பேசிய போது "உல்ஃபா அமைப்பைச் சேர்ந்த, சில கொலைகளை செய்த, சில குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தீவிரவாதி என்றும் விசாகப்பட்டிணத்தில் கைது செய்து கௌஹாத்தி கூட்டிப் போவதாக தெரிந்தது.

நாங்கள் கட்டாக் சென்ற போது வட இந்தியப் பெண்களால் எங்கள் தோழர்கள் நிறத்தின் காரணமாக விடுதலைப்புலிகள் என்று இறக்கி விடப்பட்டார்கள். 

கட்டாக்கில் முதல் முறையாக  என்ற பழைய பதிவை தயவு செய்து படித்து விடுங்கள். 

நிஜமான தீவிரவாதி எப்படி இருந்தான் பார்த்தாயா என்று பிறகு பேசிக் கொண்டோம்.

அன்பே சிவம் படத்தில் கமலஹாசன் மாதவனிடம் சொன்ன வசனத்தை கேட்டதும் எனக்கு அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.


No comments:

Post a Comment