தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதி விட்டார் போல. வெறுமனே அரசை மட்டும் நம்பாமல் வெரும் வெளி வேண்டும் என்பதற்காக முதலாளிகளின் மனம் குளிரும் படி பேசியுள்ளார்.
மிக மிக அபத்தமாகவும் வன்மமாகவும் உளறியுள்ளார். இவர் சொன்ன அபத்தத்தை சங்கிகள் பலர் வாந்தியெடுப்பார்கள். அப்படிப்பட்ட சுரண்டல்வாதிகள் சாம்சங் போராட்டத்தின் போதும் வாந்தி எடுத்தனர். அந்த மூடர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்காக அப்போது எழுதிய மூன்று பதிவுகளின் இணைப்புக்கள் கீழே உள்ளது.
தொழிலாளர்களின் போராட்டம் - சங்கிகளின் பொய்க்கணக்கு . . .
டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?
தொழிற்சங்கம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை காலம் உடனடியாகவே உரக்கச் சொன்னது.
அது என்ன?
கீழேயுள்ள இணைப்பை பாருங்கள்.
தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால் ??? சங்கிகளே சொல்லுங்கள்
தலைமை நீதிபதி அவர்களே, தொழிற்சங்கப் போராட்டங்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? உங்களிடம் விபரம் உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா? சங்கிகள் போல வாய்க்கு வந்ததை உளறக்கூடாது.
எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை அழிக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அதனை இன்று வரை பாதுகாத்து வருவது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பல நிறுவனங்களுக்கும் காவல் அரண் தொழிற்சங்கங்கள்தான்.
வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படக்கூடாதா? அப்படி நிர்ணயிக்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு வேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஊதியம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு கிடையாதா? அரசு நிர்ணயிக்கும் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை கோர்ட்டுக்கு இழுப்பதில் என்ன தவறு இருக்கிறது?
மோடி போல, ஆட்டுக்காரன் போல நீங்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது.
நீங்கள் படித்தவர். சுயேட்சையான அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.
இனியாவது உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தை காத்திடுங்கள்.


No comments:
Post a Comment