மேலே உள்ளது அமைதிப்படை படத்தில் வரும் ஒரு காட்சி. தன் மனைவியை அமாவாசை கொல்லச் சொல்லும் போது மணிவண்ணன் பேசும் வசனம் இது.
இன்றைக்கு யார் அது போல ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
கீழேயுள்ள படத்தை பாருங்கள்.
மேலேயுள்ள படத்தில் இருப்பவர் அட்மிரல் அருண் பிரகாஷ். இந்திய கப்பற்படையின் தளபதியாக 31.07.2004 முதல் 31.10.2006 வரை செயல்பட்டுள்ளார். இவரது மொத்த பணிக்காலம் நாற்பது ஆண்டுகள். எழுபதுகளில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நேரடியாக களத்தில் இருந்துள்ளர். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் "வீர் சக்ரா பதக்கம்"
அவர் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே உள்ளது.
இப்போது எதற்கு அந்த வயதான அதிகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?
பணி ஓய்வுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் கோவாவில் வசித்து வருகிறார்கள்.
ஒரு பொறுப்பான குடிமகனாக SIR க்கான படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுத்துள்ளார்.
அவருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.
என்னவென்று?
அவரும் அவரது மனைவியும் இந்திய குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களோடு 18 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வருமாறு அந்த கடிதம் சொன்னது.
இது ஏதோ ஒரு சின்ன கோளாறு. அதற்காக மோடியை அமாவாசை என்ற ரேஞ்சிற்கு பேச வேண்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள் !
இந்த பிரச்சினை என்றில்லை, எப்போதுமே மோடி அமாவாசைதான். அது வேறு விஷயம்.
கப்பற்படை தளபதியாக இருந்தவருக்கு வேண்டுமென்றே வாக்குரிமையை மறுப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களா?
ஆமாம்.
ஏன்? அதற்கென்ன அவசியம்?
ராணுவத்தில் பணி நியமன முறையை மாற்றி ராணுவ வீரர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் அக்னிபாத் முறையை திரு அருண்பிரகாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.
இது போதாதா மோடிக்கு?
கப்பற்படை தளபதியாக இருந்தாலும் அரசின் மூடத்தனத்தை சாடினால் அவர்களது குடியுரிமையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள்.
கேடு கெட்ட ஆட்சி இது.



No comments:
Post a Comment