“இந்தியா” கூடிய அதே நாளன்று டிமோவும் ஒரு 38 கட்சிகளின்
கூட்டத்தை கூட்டினார் என்பது நினைவில் உள்ளதல்லவா!
அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட ஒரு
கட்சியின் பெயர் என்ன தெரியுமா?
“இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்”:
இப்படி ஒரு கட்சி இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?
இந்த கட்சியையெல்லாம் கூப்பிட்டவங்க ஏன் தரகுப்புயலை
அழைக்கலைன்னு தெரியலை.
எம்.எல்.ரவின்னு ஒருத்தரு தேசிய மக்கள் சக்தி கட்சின்னு ஒரு
லெட்டர்பேட் கட்சி வச்சு சங்கிகளை விட தீவிரமா டிமோவுக்கு ஜால்ரா போடுவாரு. அவரை
கூப்பிட்டாங்களான்னு தெரியலை. அவர் என்னை
ப்ளாக் செய்து விட்டதால் விபரம் தெரியலை.
“புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல படுத்துக்கோ” என்ற கதையாக
இந்த கூட்டணிக்கட்சிகளுக்கிடையே ஒளிந்து
கொண்டு சீன் போடுகிறார் “56 இஞ்ச் மார்பன்”
No comments:
Post a Comment