26 ரபேல் விமானங்கள் வாங்கி கமிஷன் வாங்குவது மட்டும் டிமோவின்
பிரான்ஸ் பயணத்தின் நோக்கமல்ல, நீங்கள் ஈபிள் டவர் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான
கட்டணத்தை ரூபாயில் கொடுக்கலாம். அதுதான் டிமோவின் சாதனை என்று பீற்றிக் கொள்கிறது
ஒரு கூட்டம்.
“நடுராத்திரியில நான் ஏண்டா சுடுகாடு போகனும்?” என்பது போல
ஈபிள் டவர் கட்டணத்தை ரூபாயில் வசூலிப்பதற்காக நாங்கள் ஏண்டா பிரான்ஸ் போகனும்?
அரசியல் சட்டப் பிரிவு 370 அகற்றப் பட்ட போது “யார்
வேண்டுமானாலும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் தெரியுமா” என்று ஒரு கூட்டம் சொல்லிக்
கொண்டிருந்தது. பாவம் அவர்களால் தமிழ்நாட்டில் கூட இடமோ வீடோ வாங்கி அதற்கு
ஈ.எம்.ஐ கட்ட முடியாதவர்கள்.
அது போலத்தான்
இப்போது பெருமை பேசும் யாரும் பிரான்ஸ் போகக் கூடியவர்கள்
அல்ல. பக்கத்தில் உள்ள இலங்கை, ஏன் பெங்களூர் கூட போக வசதியற்றவர்கள்.
பாரீசுக்கு போக விமானக் கட்டணம், ஈ ஓட்டும் காலத்திலேயே 25
ஆயிரத்துக்கு குறையாதாம். அப்படி செலவு செய்து ஊர் சுற்றப் போகிறவர்களுக்கு அந்த
நாட்டு நாணயத்தைக் கொடுத்து ஈபிள் டவர் பார்ப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
இதெல்லாம் ஒரு சாதனையா டிமோ?
No comments:
Post a Comment