கர்னாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து எத்தனையோ நாட்கள் கடந்து விட்டது. முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரே முடியப் போகிறது. ஆனாலும் பாஜக தன் சட்டமன்றக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி காலியாகவே இருக்கிறது.
ஏன் இந்த தாமதம்?
இந்த கேள்விக்கு பதில் இப்போது கிடைத்து விட்டது.
குமாரசாமி கட்சியோடு பாஜக டீலிங் செய்து கொண்டிருக்கிறது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத்தில் ஒரே அணியாக செயல்படுவதுதான் ஏற்பாடாம். அந்த ஏற்பாடு உறுதியானால் குமாரசாமிதான் எதிர்க்கட்சித் தலைவராம்.
இதனால்தான் இவ்வளவு தாமதமாம்!
ஆமாம், குமாரசாமியின் ஊழலுக்கு எதிராக கர்னாடக தேர்தல் பிரச்சாரத்தில் முழுங்கிய ஆட்டுக்காரனுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?
தேர்தல் பொறுப்பாளராக இருந்த போதே எவனும் மதிக்கலை. இப்போ எப்படி மதிப்பார்கள் என்று கேட்கிறீர்கள்.
ஆமாம். அதுவும் சரிதான். . .
No comments:
Post a Comment