Sunday, July 30, 2023

பத்ரி கைது - மகிழ்ச்சியாகவே இருந்தது

 


ஒரு நெருங்கிய உறவினரின் இறப்பு காரணமாக நேற்று வலைப்பக்கம் பக்கம் வர இயலவில்லை.

கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேசாத்ரி கைது செய்தி அறியும் முன்னரே அந்தாள் பேசிய காணொளியை பார்க்கும் துரதிர்ஷ்டம் வாய்த்தது.

"மணிப்பூரில் கலவரம் இயல்பானது. அடித்துக் கொண்டு சாவார்கள்தான். பாலியல் கொடூரம் நடக்கத்தான் செய்யும். உச்ச நீதிமன்றம் அபத்தமாக பேசுகிறது. சந்திரசூட் துப்பாக்கி எடுத்துக் கொண்டு  போய் அங்கே என்ன செய்வார்? தமிழர்கள் பொறுக்கித்தனமாக பிரச்சினை செய்கிறார்கள். தமிழ்க் கவிஞர்கள், அதிலும் பெண் கவிஞர்கள் இலங்கை கவிதைகளை காப்பி அடித்து கவிதை எழுதுவார்கள். மத்திய அரசு சரியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது."

இதை பார்க்கும் போதே இந்தாள் மீது யாராவது புகார் கொடுத்து போலீஸ் கைது செய்து கும்முகும்மு என்று கும்மினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அது நடந்ததால் . . 

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ மிகவும் சந்தோஷமாக இருந்தது"

என்று சொன்ன கயவன் 

கைது செய்யப்பட்டது சொந்த துக்கத்தையும் மீறி சந்தோஷமாகவே இருந்தது. 

2 comments:

  1. மக்கள் பணத்தை கொள்ளை அடித்து நெஞ்சு வலி என்று அவர்களே நடத்தும்
    ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டு இப்போது புழல் ஜெயிலில் இருப்பவர்
    போல அல்ல பத்ரி . மனதில் பட்டதை தைரியமாக கூறி கருத்து சுதந்திரம் ஆள்பவர்களுக்கு
    மட்டுமல்ல மக்கள் அனைவருக்கும் உண்டு என நிரூபித்து இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. பத்ரி செய்தது அயோக்கியத்தனம். பிளவுவாதத்திற்கு ஆதரவு. ஜாதிய மேட்டிமை புத்தி. மனிதர்கள் அவனை ஆதரிக்க மாட்டார்கள்

      Delete