கேரளாவில் புதிய பணம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது என்ன அது தெரியுமா?
இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகள்தான் அத்தொழில்.
ஆங்கில இந்து நாளிதழில் போன வாரம் படித்த சுவாரஸ்யமான செய்தி.
திருமண ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிகள், கோவிட் காலத்தில் தொடங்கிய இத்தொழில் நிறுவனங்களை பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் பயன்படுத்தினாலும் மற்ற மதத்தினரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனராம்.
ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறார்களாம்.
சவப்பெட்டியின் தரம், அதற்குள்ளே செய்யப்படும் அலங்காரம் ஆகியவை கட்டணத்தைப் பொறுத்தவரை மாறுமாம்.
சடலத்திற்கு அணிவிக்கப்படும் ஆடைகள், சடலத்திற்கு செய்யப்படும் அலங்காரம் ஆகியவை கட்டணத்தை பொறுத்து அமையுமாம். இறுதியாக பார்க்கும் வாய்ப்பு என்பதால் நல்ல அலங்காரத்தையே இப்போதெல்லாம் விரும்புகிறார்களாம்.
வீட்டிலிருந்து தேவாலயம், தேவாலயத்திலிருந்து இடுகாடு வரை ராயல் என்பீல்ட் புல்லட்டுக்களின் அணி வகுப்பு வேண்டும் என்றும் சிலர் விரும்புகிறார்களாம்.
இடுகாட்டில் செய்யப்படும் மலர் அலங்காரத்திற்கும் கட்டணங்கள் தனியாம்.
அனைத்து நிகழ்வுகளையும் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது கண்டிப்பாக அனைத்து வித பேக்கேஜுகளிலும் கண்டிப்பாக உண்டு. வர முடியாதவர்களுக்கான சேவை இது.
இன்னும் பலப்பல புதுமைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறதாம்.
பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான். உங்களுக்கு என்ன என்ற கேள்வி எழலாம்.
வசதி உள்ளவர்கள் செய்யும் ஆடம்பரத் திருமணங்களைப் பார்த்து மற்றவர்களும் அது போன்ற ஆடம்பரத் திருமணங்களை நோக்கிச் சென்று பிறகு துயரப்படுவதை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
அது போன்றதொரு நிலை இறுதிச் சடங்குகளிலும் வரக் கூடாதல்லவா!
ஆனால் ஒன்று, தனக்காக இப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என்பது இறந்து போனவருக்கு மட்டும் தெரியாது . . .
இறந்து போனபிறகு இதை எல்லாம் செய்யவேண்டும் என முன்னதாகவே ஏற்பாடு செய்து பணம் கட்டி வைப்பவர்களும் இருப்பார்களே அதையும் செக் செய்து எழுதுங்கள்
ReplyDeleteஇங்கே கனடா வந்த புதிதில் இப்படி ஒரு இறுதி கிரியை செய்யும் அமைப்பின்
ReplyDeleteவிளம்பரம், இப்படி எனக்கு தபாலில் கிடைத்தது ..முதன் முதல் முதலில் பார்த்த போது என்னவோ போல இருந்தது .... பின்னர் பழகிவிட்டது .. இப்பொழுது தான் இந்தியாவுக்கு வந்து இருக்கிறது ...