Saturday, July 15, 2023

நோட்டீஸ் எதற்கு? இழுத்து மூடவும்

 


மேலே புகைப்படத்தில் உள்ளது ஜே.எஸ்.எஸ் என்ற ஊட்டியில் உள்ள ஒரு பள்ளி. இந்த பள்ளியிடம் விளக்கம் கேட்டு மாவட்ட தலைமை கல்வி அலுவலர் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எதற்குத் தெரியுமா?

டிமோவின் தலைமை பீடத்தின் தலைமை பூசாரி மோகன் பகவத் இந்த பள்ளி வளாகத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக பள்ளிக்கு பத்து நாட்கள் விடுமுறை அளித்தமைக்காக நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்காக பத்து நாட்கள் விடுமுறை அளிப்பதை அவ்வளவு சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது.

ரத்தம், நாடி, நரம்பு ஆகியவற்றில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் வெறி ஊறிப் போன ஒருவனால்தான் மாணவர்களின் கல்வி பத்து நாள் பாழாகிப் போகிறதே என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் இப்படி விடுமுறை விட முடியும்!

இப்படிப்பட்ட ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருவார்கள்!

விசாரித்துப் பாருங்கள், அந்த பள்ளி ஆர்.எஸ்.எஸ் ஸின் ஷாகா நடத்தும் மையமாகத்தான் கண்டிப்பாக இருக்கும்.

நச்சு விதைகளை பரப்புவதுதானே ஷாகாக்களின் நோக்கம்!

இப்படிப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களால் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்து!

எனவே இப்படிப்பட்ட விஷ விருட்சங்களை வேரோடு அகற்றுவதே மேல்.

அதனால் இழுத்து மூடுவதுதான் சிறப்பான நடவடிக்கை.

No comments:

Post a Comment