Wednesday, July 12, 2023

சங்கிகளின் துயர வாழ்க்கை

 


செந்தில் பாலாஜியை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்ற அளவிற்கு ஊழல் ஒழிப்பு வாதிகளாக சீன் போட்டு விட்டு செந்தில் பாலாஜியை விட மிக மோசமான ஊழல்வாதி அஜித் பவாரை பாஜகவில் இணைத்து துணை முதல்வர் போஸ்டிங் கொடுக்கும் போது இதுதாண்டா ராஜ தந்திரம் என்று கிருஷ்ண பரமாத்மாவையெல்லாம் இழுக்க வேண்டும்.

பிரான்ஸில் நடக்கும் கலவரத்துக்கு பொங்கி எழுத வேண்டும். ஆனால் மணிப்பூரில் நடக்கும் கலவரம் குறித்து மறந்தும் கூட மவுஸை தட்டி விடக் கூடாது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்க வேண்டும். அதுவே பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு  விலை உயர்வு நிகழ்ந்தால் அது எங்கோ துபாயில் மஸ்கட்டில் நடப்பது போல முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும்.

மாமன்னன் படத்தில் வரும் நாற்காலி சீனையும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தன்னை பார்க்க வந்தவர்களை நிற்க வைத்து தான் மட்டும் அமர்ந்திருந்ததை ஒப்பிட்டு நக்கலடிக்க வேண்டும். ஆனால் காஞ்சி மடாதிபதிகள் பொன்னாரையும் எல்.முருகனையும் நாற்காலி தராமல் தரையில் அமர வைத்ததை கண்டு கொள்ளக் கூடாது.

இதையெல்லாம் யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை கடுமையாக வ்சை பாட வேண்டும். அல்லது பதிலளிக்காமல் கடந்து  செல்ல வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்.

சங்கியாய் வாழ்வது எவ்வளவு பெரிய துயரம் என்று! “உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கறேன்” மொமெண்டிலேயே எப்போதும் உள்ளவர்கள் சங்கிகள்.

அப்படியெல்லாம் மனசாட்சியுள்ள சங்கிகள் இருக்கிறார்களா! சங்கிகளில் மொத்தமே அயோக்கிய சங்கி, அடி முட்டாள் சங்கி என்று இரண்டே கேட்டகரிதானே உள்ளது என்று கேட்கிறீர்கள்.

அதுவும் சரிதான்….

 

No comments:

Post a Comment