Thursday, July 13, 2023

யாருடைய நாடகம்? எதற்காக?

 


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மட்டும் போரிட்டிருந்தால் இந்த போர் எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் இது இத்தனை நாள் இழுத்துச் செல்வதற்கான காரணமே இது  ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேடோ NATO) அமைப்பிற்கும் இடையிலான போர் என்பதால்தான்.

நேடோ நாடுகளின் உதவியோ, போர்த்தளவாடங்களோ, நிதியுதவியோ, உளவுத்தகவல்கள், ஆலோசனைகள் இல்லாமல் உக்ரைனால் இத்தனை காலம் தாக்கு பிடித்திருக்க முடியாது.

ஆனால் இன்று செய்தி பார்த்தேன்.

உக்ரைன் ஜனாதிபதி ஃஸேலன்ஸ்கி நேடோ நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். உக்ரைனை எப்போது நேடோவில் சேர்த்துக் கொள்வீர்கள் என்பதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணியுங்கள் என்பது அவரது ஆதங்கம்.

ஏன் அவர் அப்படி கேட்டுள்ளார் என்பதையும் அந்த செய்தி விளக்குகிறது.

சமீபத்தில் நடந்த நேடோ உச்சி மாநாட்டில் “உக்ரைன் இப்போது ரஷ்யாவுடம் போரிடுவதால் உக்ரைனை இப்போது நேடோவில் சேர்த்துக் கொண்டால் அந்த போரில் நேடோ தலையிட வேண்டியிருக்குமாம். அதனால் யோசிக்கிறார்களாம், அமெரிக்காதான் ரொம்பவே சிந்திக்கிறதாம்”

“இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்” என்ற புதுப்பேட்டை வசனத்தை நேடோ உக்ரைனில் சொல்லியுள்ளதாக அந்த செய்தி சொல்கிறது.

நேடோவின் தலையீட்டால்தான் உக்ரைன் ரஷ்யா போரே நடந்து கொண்டிருக்கிறது, ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

அப்படி இருக்கையில் எதற்கு இந்த நாடகம்? யாரை ஏமாற்ற?


4 comments:

  1. So if NATO did not intervene, russia would have defeated ukraine, and russia would have annexed the whole of ukraine and that is what you want ?

    So russia is correct and ukraine is wrong.

    1. Periyar had told to always support the underdog and the victim. Ukraine is the victim.

    2. Russia is not a communist country, russia is a kleptocracy/dictatorship like india.
    putin is a criminal and is an inspiration to modi.
    எதுக்கு ஒரு non communist countryku பொங்குர​?

    3. You are just a communist sanghi.

    ReplyDelete
    Replies
    1. https://ramaniecuvellore.blogspot.com/2022/02/blog-post_76.html

      Delete
    2. https://ramaniecuvellore.blogspot.com/2022/09/blog-post_47.html

      Delete
  2. அய்யா அனாமதேயம், மேலே உள்ள இரண்டு இணைப்புக்களை படிக்கவும். ரஷ்யா ஒரு கம்யூனிஸ்ட் நாடென்ற மாயையெல்லாம் யாருக்கும் கிடையாது. உக்ரைன் பாதிப்புக்குள்ளான நாடுதான். அமெரிக்காவையும் நேடோவையும் நம்பி ஏமாந்த நாடு. அந்த மக்களின் பாதிப்புக்கு அந்த நாட்டு ஆட்சியாளர்களே காரணம். கம்யூனிஸ்டுகள் சங்கியாக இருக்க முடியாது. அப்படி சொல்லும் உம்மை மூடச்சங்கி என்றுதான் சொல்வேன்.

    ReplyDelete