மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அமெரிக்கா போய் டிமோ சாதித்தார் என்று எவனாவது கதைத்தால் அவனை இதை படிக்கச் சொல்லவும்.
சிப்(chip) வாங்க போறேன்; சிப் வாங்க போறேன்; நான் ரொம்ப புத்திசாலி டா!
ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. அந்த கம்பெனியில மொத்த முதலீடு 22 , 765 கோடி .இதில் 50 சதவீதத்தை அதாவது 11,382 கோடியை ஒன்றிய அரசாங்கம் முதலீடு செய்கிறது. அடுத்து 20% குஜராத் மாநில அரசாங்கம் முதலீடு செய்கிறது .அது 4,553 கோடி ரூபாய் மீதி உள்ள 30 சதவீதத்தை அதாவது 6,830 கோடியை மைக்ரான் என்கிற அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது.
அப்படியானால் இந்த மைக்ரான் நிறுவனம் உருவாக்குகிற புதிய நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எழும் .
50 சதவீதம் கொடுத்த ஒன்றிய அரசுக்கும் சொந்தமில்லை!
20% கொடுத்த குஜராத் அரசுக்கும் சொந்தமில்லை!
50% ,30%, 20% என்று கொடுத்தவர்களுக்கு சமமான பங்கு அல்லது கூட்டு உரிமை என்பதும் கிடையாது .
மாறாக 30 சதவீதத்தை மட்டும் முதலீடு செய்த அமெரிக்க கம்பெனி ஆன மைக்ரான் நிறுவனத்துக்கு தான் இந்த ஒட்டுமொத்த தொழிற்சாலையும் சொந்தம்.
சரி அப்படி என்ன இந்த தொழிற்சாலை அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது?
இது சிப்ஸ் தயாரிக்கிற தொழிற்சாலை அல்ல. மாறாக வேறு நாடுகளில் தயாரிக்கிற சிப்பை இங்கு கொண்டு வந்து அசெம்பிள் செய்வது அதேபோல அதை டெஸ்ட் செய்வது ரெண்டு வேலை தான் நடக்கும் .
அதற்கான இந்த தொழிற்சாலைக்கு 70 சதவீதம் இந்திய மக்களின் வரிப்பணத்தை கொடுத்து அமெரிக்க நிறுவனத்தின் கையில் தூக்கிக் கொடுத்திருக்கிறது மோடி அரசாங்கம்.
இதைத்தான் மோடி ஆதரவாளர்கள் மோடி அமெரிக்காவுக்கு போனார் ஆகாயத்தை வளைத்தார் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கப்போகிறது என்று கொண்டாடி வருகிறார்கள்.
மிக கேவலமானவர்கள் இவர்கள் ஒரு தோல்வியை கூட அல்லது ஒரு மிகப்பெரிய அளவிற்கு இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்த ஒன்றைக் கூட அது இந்தியாவிற்கு அற்புதம் ஆகா ஓகோ என்று புகழ்வதில் இவர்களுக்கு இணை இவர்கள் தான்.
இதில் மற்றொரு விஷயம் முதலாளித்துவம் அது எப்போதுமே ஏதோ தனிப்பட்டவர்கள் கொண்டுவந்து இங்கு சாதித்து விட்டதாக கொட்டி விட்டதாக அளந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தனியார் துறையில் துவக்கப்படுகிற ஒவ்வொரு தொழிற்சாலையும் இப்படித்தான் பொதுப்பணத்தில் துவக்கப்படுகிறது.
ஆனால் 70% என்பது இதுவரை நாம் காணாதது மோடி இன்னும் சில காலம் நீடித்தால் 100% நம்முடைய வரிப்பணத்தை தூக்கி கொடுத்துவிட்டு மிகச் சாதாரணமாக அந்த உரிமையும் வருகிற அதானி, அம்பானிக்கு, மைக்ரானுக்கு, ஆப்பிளுக்கு கொடுத்துவிட்டு அதையே தங்கள் சாதனை என்று கொண்டாடுவார்கள்.
ஆனால் மற்றொரு பக்கம் இந்தியாவில் தனியாரிடம் கொடுக்கப் போகிற 34 ரூபாய் ஒரு கிலோ அரிசி என்பதை மாநில அரசாங்கங்களுக்கு அதே விலையில் கொடு என்று கேட்டால் மோடியும் சங்பரிவாரம் நாங்கள் வியாபாரிகளுக்கு 34 ரூபாயில் கொடுத்து விடுகிறோம் உங்களுக்கு தேவை என்றால் அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
இவர்கள் தேசபக்தியை பற்றி பேசலாமா?
No comments:
Post a Comment