தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் சுவாரஸ்யமான முகநூல் பதிவு.
கண்ணா லட்டு திண்ண ஆசையா ?
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கொண்டாட பள்ளி தாளாளர் 1000 லட்டுகள் வாங்குவார். மாணவர்கள் 500 பேர். ஆளுக்கு ஒன்று வழங்குவார். மீதி ஐநூறை தாளாளரும் பள்ளி தலைமை ஆசிரியரும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
இந்த அநீதியை ஒருவர் உரக்கப் பேசினார். அவர் கைக்கு பள்ளி நிர்வாகம் போனது.
இரட்டிப்பு சந்தோஷம் மாணவர்களுக்கு. வழக்கமாக ஒரு லட்டு கிடைக்கும் . இந்த ஆண்டு இரண்டு லட்டாவது கிடைக்கும் என மாணவர்கள் உற்சாகமானார்கள்.
ஆனால் மாணவர்களுக்கு ஆளுக்கு அரை லட்டுதான் வழங்கப்பட்டது.
வழக்கம் போல் தாளாளரும் தலைமை ஆசிரியரும் தலா 250 எடுத்துக் கொண்டனர்.
விழாவுக்கு வந்த மூன்று விருந்தாளிகளுக்கு தலா 750 லட்டுகளை பொட்டலம் கட்டிக் கொடுத்தார்.
மாணவர்களுக்கு சராசரி ஆளுக்கு நான்கு லட்டு என தலைமை ஆசிரியர் ஆண்டறிக்கையில் வாசித்தார்.
எங்களுக்கு கிடைக்கவில்லையே ..
விடை தப்பு என்றான் ஒரு மாணவன்.
அவனுக்கு வேத கணிதம் விளங்க வில்லை என பெயிலாக்கப்பட்டான்.
சராசரி தனிநபர் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக நிதி அமைச்சர் கர்மலா தெரிவித்தாக தொலைகாட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர்.
அரை லட்டை ஆயுள் முழுவதுமாக சாப்பிடுவது எப்படி ? யோகா தியான வகுப்புகளில் சொல்லித்தரப்படுமென செய்தியைத் தொடர்ந்து விளம்பரம் ஒளிபரப்பானது.
அந்த மாணவர்களில் இருபது பேர் முஸ்லீம்களாகவும் கிறுத்தவர்களாகவும் இருப்பதால்தான் இந்து மாணவர்களுக்கு அரை லட்டு என்றானது. எனவே அவர்களை பள்ளியை விட்டு துரத்த வேண்டுமென மாணவர்களிடையே செய்தி காட்டுத் தீயாய் பரவ கலவரம் வெடித்தது.
இந்து மாணவர் லட்டைப் பிடுங்கிய சிறுபான்மையோர் குறித்து ஊடகங்கள் 24x7 விவாதம் செய்தன.
அடுத்த ஆண்டு எட்டாயிரம் லட்டு இலக்கென தாளாளர் டிமோ அறிவித்தார்.
இனி ஐநூறு மாணவர்களுக்கும் ஆளுக்கு கால் லட்டு உறுதியென கோணக்கியா ஊடகம் உறுதிபட மகிழ்ச்சியுடன் தெரிவித்தது.
( இது முழுக்க முழுக்க தெனாலி ராமன் சொன்ன கதை. சத்தியமாக நாட்டு நடப்பல்ல )
சுபொஅ.
4 ஜூலை 2023.
நிஜத்திற்கு வருவோம், கோவையிலிருந்து மன்னிப்பு கடிதம் தயாரா?
ReplyDeleteஅது என்ன?
Deleteநிதி அமைச்சர் கர்மலா......
ReplyDeleteஅரை லட்டை ஆயுள் முழுவதுமாக சாப்பிடுவது எப்படி ? யோகா தியான வகுப்புகளில் சொல்லித்தரப்படுமென செய்தியைத் தொடர்ந்து விளம்பரம் ஒளிபரப்பானது......
டிமோ...... செம..... அடேங்கப்பா...
எனது தளத்தை பார்வையிட