ஏன்யா "வெறும் நரேந்திரா" உமக்கு பிடிக்கவே பிடிக்காத இடம் பார்லிமெண்ட். நீர் அங்க போகவும் மாட்டீரு, போனா பேசவும் மாட்டீரு, உம்ம எஜமானனுங்களோட ஃபிராடு பத்தி மத்தவங்களையும் பேசவும் விட மாட்டீரு.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
மத்தியப் பிரதேசம் இந்தோரில் நேற்று ஒரு கோவிலில் ராம நவமியை ஒட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் இது வரை முப்பத்தி ஐந்து பேர் இறந்துள்ளார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
எப்படி நடந்தது இந்த விபத்து?
முதலில் அதனை கோயில் என்று சொல்வதே தவறு.
ஐம்பது அடி ஆழமுள்ள பழைய பெரிய கிணறு. கிணறையும் கிணற்றை சுற்றியுள்ள இடத்தையும் கோயிலாக மாற்றி விட்டார்கள்.
கும்பகோணம்
தீ விபத்து பள்ளிகளின் பாதுகாப்பு பற்றிய விவாதத்தை உருவாக்கியது. வழிபாட்டுத் தளங்களின்
(அனைத்து மதங்களையும் சேர்த்தே சொல்கிறேன்) பாதுகாப்பு பற்றி விவாதிக்க வேண்டிய நேரம்
இது.
பிகு:
இலங்கையில் ஈஸ்டர் அன்று சர்ச்சுகளில் வெடி குண்டு வெடித்து ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்ட
போது “ஏசப்பா” என்று தலைப்பு கொடுத்த தின மலர் இந்த சம்பவத்துக்கு என்ன தலைப்பு கொடுத்தது
என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
"வெறும் நரேந்திரா" அரசின் ஒரு அற்பத்தனமான முயற்சி, தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்று அச்சடிக்க வேண்டும் என்ற உத்தரவு.
இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டால் சரி.
உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புக்கு இந்தியை பரப்பும் வேலையெல்லாம் எதற்கு?
"வெறும் நரேந்திரா"வின் நண்பனான ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புக்கள் பற்றித்தான் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் வருகிறது. அதிலாவது கவனம் செலுத்தினால் பரவாயில்லை.
வாரம் ஒரு நூல் அறிமுகம்
இந்த வாரம் 27.03.2023
நூல் : முகாம்.
ஆசிரியர் : அ.கரீம்,
வெளியீடு : “எதிர்” வெளியீடு,
பொள்ளாச்சி.
விலை : ரூபாய்
300.00
அறிமுகம் செய்பவர் ; எஸ்.ராமன், வேலூர்.
தாழிடப்படாத கதவுகள், அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி உட்பட மூன்று உள்ளத்தை உருக்கும் சிறுகதைத் தொகுப்புக்களின் ஆசிரியர் தோழர் அ.கரீம் அவர்களின் முதல் நாவல் “முகாம்”
நடந்த கதையா?
நடந்து
கொண்டிருக்கும் கதையா?
நடக்கப்
போகும் கதையா?
இந்தியாவின் குடிமக்களாக யார் இருக்க வேண்டும் என்று சாவர்க்கரும் பின் கோல்வால்கரும் சொன்னார்களோ, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின் மோசமான விளைவுகளை அஸ்ஸாம் மாநிலம் ஏற்கனவே சந்திக்கத் தொடங்கி விட்டது.
இக்கொடூரச்சட்டம் இந்தியா முழுதும் அமலாகினால் என்ன ஆகும்?
மைமூன் என்ற முதிய பெண்மணி, ஷாகிரா எனும் இளம் தாய் ஆகிய இருவரின் மூலம் கதை எடுத்துச் செல்லப்படுகிறது.
மைமூன் பீவியின் முன்னோர் மருது பாண்டியர் படையில் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டவர். மைமூன் பீவியின் தாத்தா மைதீன் பாஷாவோ இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் வாழும் கிராமத்தையே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தவர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை கிராமத்துக்கு கூட்டி வந்ததால் மகாத்மா காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மைதீன் பாஷா, நிச்சயம் அவரையும் கூட்டிக்கொண்டு வந்து விடுவார் என்று நம்பி இட்லியும் தலைக்கறியும் குடலும் செய்து அன்போடு காத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.
மைதீன் பாஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது பெண் ஷாபியா குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. கோவையில் ஆலைத் தொழிலாளியாய் பணியாற்றுகிற ஷாபியா கடும் நோயில் சிக்க தன் மகள் மைமூனை ஒரு மார்க்கப்பள்ளியில் சேர்க்கிறார். ஆலைத் தொழிலாளிகளின் காவல் அரணாக செங்கொடிச் சங்கமும் தோழர் கே.ரமணி போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் மிகச் சரியாக பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர். மார்க்கப்பள்ளியில் வளர்கிற மைமூனுக்கு இப்ராஹீமுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் ??????
வர்த்தகத்தில் வளர்ந்து வரும் முகமது அலி – ஜைதூன் தம்பதியருக்கு குழந்தைப் பேறு இல்லாததால் ஜைதூனின் சகோதரியின் குழந்தையை தத்து எடுக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயர்கள் இல்லாததால் எதிர்காலத்தில் தங்கள் மகள் தங்களை பிரிந்து விட்டால் என்னாவது என்ற அச்சத்தில் வழக்கறிஞர் ஆலோசனைப்படி நீதிமன்றத்தின் மூலமாக ஒரு பிறப்புச் சான்றிதழ் வாங்குகிறார். ஷாகிரா வளர்ந்து எம்.பி.ஏ படித்த பின்பு ரபீக்குடன் திருமணமும் நடைபெறுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போகிறது. மகிழ்ச்சி நிலைத்ததா?
குடியுரிமைச்சட்டம் வருகிறது. பிறப்புச் சான்றித்ழோ அதற்கான ஆவணங்களோ கொடுக்க முடியாதவர்கள் அரசு அமைக்கும் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் அரசின் காவல்துறையாலும் அரசுக்கு வேண்டப்பட்ட சேவா அமைப்பின் குண்டர்களாலும் எப்படி தாக்கப்படுகிறது என்பதையும் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகிறது என்பதையும் நெஞ்சம் பதைக்கும் வண்ணம் ஆசிரியர் விவரிக்கிறார்.
அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய் வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் தள்ளப்படும் இன்றைய நிகழ்வு நாவலிலும் வருகிறது.
முகாமில் ஷாகிராவுக்கும் மைமூனுக்கும் ஏற்படும் நெருக்கம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கின்றனர். முகாமின் காட்சிகள், அந்த ஆரோக்கியமற்ற சூழல்கள், பாஸிச இட்லரின் வதை முகாமில் சிக்கி உயிர் தப்பிய எலி வீஸலின் “இரவு” நூலை நினைவு படுத்துகிறது. சேவா அமைப்புக்கு ஒத்து வராத இந்துக்கள் கூட முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மைமூனின் பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து அந்த ஆவணங்களோடு மகிழ்ச்சியோடும் கொஞ்சம் கர்வத்தோடும் வீடு திரும்புகிறார் இப்ராகிம். அவற்றைக் கொண்டு அவரால் மைமூனை முகாமிலிருந்து வெளியே கொண்டு வர முடிந்ததா?
பெற்றோரை கலவரக்காரர்களின் தாக்குதல்களில் இழந்த ஷாகிராவுக்கு முகாமை விட்டு வெளியேறும் நற்பேறு கிடைத்ததா?
“வாசகர்களை கலங்க வைப்பதே இந்த மனிதனுக்கு வழக்கமாக போச்சு” என்று நூலாசிரியரை கடிந்து கொள்ள ஒரு கணம் மனதில் தோன்றியது. இன்றைய ஆட்சியாளர்களின் பாஸிச நடவடிக்கைகள் தொடர்வதை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நூலில் சொல்லப்பட்டவை நாளை தமிழ்நாடு உட்பட இந்தியா முழுதும் நிகழும் என்று நூல் ஒலிக்கும் எச்சரிக்கை மணியை செவி மடுக்க தவறினால், இந்த ஆட்சியை வீழ்த்தாவிட்டால் நாளை நாமே நம்மை கடிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
செவ்வானம்.
உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் குரங்குக் குளியலில் பேசியுள்ளார் "வெறும் நரேந்திரா"
நல்ல வேளை இவையெல்லாம் புராண காலத்திலேயே இருந்தது என்ற கதையை அவிழ்த்து விடவில்லை.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்த மனிதனுக்குத்தான் அவசியம் தேவைப்படுகிறது.
பாசிஸ சித்தாந்தம் குடி கொண்டுள்ள மூளையையும் இரக்கமற்ற இதயத்தையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றினால் நல்லது.
ஆனால் ஒன்று.
மாற்றப்படும் மூளையும் இதயமும் இன்னொரு சங்கியுடையதாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால்
அவையும் இந்த மனிதன் போலவே நாசமாகிப் போனதாகத்தான் இருக்கும்.
மேலேயுள்ள படத்தில் இருப்பது பாபுபாய் பொக்காரியா. மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மந்திரியாக இருந்த நபர். 2013 ல் ஒரு ஊழல் வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த மனிதனும் பதவி விலகவில்லை. சபாநாயகரும் நீக்கவில்லை. ஒரு மாதம் கழித்து மாவட்ட நீதி மன்றம் அத்தண்டனையை உறுதி செய்த பின்பே அவர் பதவி விலகினார்.
பின்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு தடை விதித்த பின்பு 2017, 2022 சட்ட மன்ற தேர்தல்களில் போட்டியிடுகிறார். 2017 ல் வெற்றி பெற்றவருக்கு 2022 ல் தோல்வி கிடைக்கிறது.
வழக்கு????
அந்த கோப்புக்கள் எந்த குப்பைத் தொட்டியில் புதைந்து கிடக்கிறதோ?
மோடி மந்திரிக்கெல்லாம் சட்டம் பொருந்துமா என்ன?
இன்னும் ஒரு விஷயம் . . .
அதென்ன???
பாபுபாய் பொக்காரியா என்ன தொகுதி தெரியுமா?
போர்பந்தர் . . .
ஆம், மகாத்மா காந்தி பிறந்த மண்தான் . . .
நேருக்கு நேராக போரிட்டால் வெல்ல முடியாதென்பதற்காக வாலியை மறைந்திருந்து கொன்றவர் ராமர்.
பீஷ்மரின் வில்லை மௌனமாக்க சிகண்டி எனும் திருநங்கையை அர்ஜூனன் தேரில் அமர வைத்து.
அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று முழக்கமிட்டு துரோணரை தேரில் நிராயுதபாணியாக அமர வைத்து
போருக்கு முன்பே கர்ணனின் கைகளை கட்டிப் போடக்கூடிய விதத்தில் வரங்களை வாங்க வைத்து
பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தது கிருஷ்ணன்.
இவற்றையெல்லாம் சொன்னது ராமாயணமும் மகாபாரதமும்தான்.
ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதாக சொல்லிக் கொள்ளும் மோடியும் அவர்களின் மோசடி நடைமுறையை கையிலெடுத்து ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்து எம்.பி பதவியை பறித்து விட்டார்.
மொத்தத்தில் மூவரிடமும் நேர்மையில்லை.
நேரடியாக மோத துணிவில்லாமல் ஒளிந்து கொண்டு மோதுபவர்கள் எல்லோருமே கோழைகள். இதிலே 56 இஞ்ச் மார்பென்ற பீற்றல் வேறு.
பாகுபலி படத்தின் இடைவேளையில் மக்கள் மனதில் பல்வாள் தேவனை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் பாகுபலி போல காட்சியளிக்கிறார் ராகுல் என்பதுதான் யதார்த்தம்.
நடப்பதும் நல்லதற்குத்தான் . . .
முதலில்
இருந்து பதினோராவது இடமல்ல . . .
விலை
வாசி உயர்வு,
சமூக
ஏற்றத்தாழ்வுகள்,
பொருளாதார
சமத்துவமின்மை
நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனையைக் காட்டிலும் வலி குறைவான வேறு கொலை வடிவம் உண்டா என்பதை ஆராய்ந்து சொல்லுமாறு நீதியரசர்கள் அரசுக்கு உத்தரவு போட்டுள்ளனர்.
விஷ ஊசி போடுவதோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதோ பயனளிக்காது என்ற விவாதமும் நடந்துள்ளது.
தூக்கு தண்டனை என்ற வடிவத்தை மாற்றுவதற்கு பதிலாக மரண தண்டனை கொடுப்பது என்பதையே மாற்றுவது என்பது பற்றி ஆராயுங்களேன் ஐயாக்களே!
ஆயுள் காலம் வரை சிறை, குறிப்பிட்ட வயது வரை சிறை என்று தண்டனைகளையே மாற்றலாம்.
உயிர் பறிக்கிற மரண தண்டனை இப்போதும் அவசியமா?
ராகுல்
காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய
ஜனநாயகத்தைப் பற்றி அவர் வெளி நாட்டில் பேசியதாக அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.
ராகுல்
பேசியது வெளிநாடாக இருக்கலாம்.
இதோ
உள்நாட்டிலேயே இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.
கீழே
உள்ள பத்திகளை முதலில் படியுங்கள்.
********************************************************************************************
ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் கடுமையாக தாக்கப்பட்டு
வருகிறது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் பெரும்
சவால்களை சந்தித்து வருகின்றன. சில அமைப்புக்களோ தங்களை ஆட்சியாளர்களின் முழுமையான
கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டன. முதலாளிகள் கட்டளையிடும் செயல்திட்டங்களை
எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் இடமாகவே நாடாளுமன்றம் மாறி விட்டது. நாட்டின்
பாதுகாப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளை முடக்குவதால் இந்திய அரசியல்
சாசனமே கறை படிந்து காட்சியளிக்கிறது
**************************************************************************************
பண
மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றில் இருந்தே இந்தியப்
பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. 2019-20 ஆண்டின் 3.1% உயர்வுதான்
ஆறரை ஆண்டுகளின் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்தான். மதியற்ற, பயனற்ற கதவடைப்பு முடிவின் காரணமாக, பொருளாதாரம் சரியத்
தொடங்கியது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டதால் 2020-21 ல் ஒட்டு மொத்த
உற்பத்தியில் 7 % சுருங்கியது. பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த
சிறுதொழில் துறை ஒழுங்காக திட்டமிடப்படாத கதவடைப்பின் மூலம் முற்றிலுமாக அழிந்து போனது.
லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர்.
**************************************************************************************
ஜனநாயகம்
என்பது வெறுமனே தேர்தல்களை நடத்துவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமல்ல என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவையே உண்மையான
ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்பது முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களையும் ஈடுபடுத்துவதாகும்.உண்மையான
ஜனநாயகம் என்பது ஆட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்பதும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களை
பொறுப்பாக்குவதாகும். உண்மையான ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதும்
யாருக்கும் சிறப்பு அந்தஸ்து தராமல் இருப்பதுமாகும்.
ஜனநாயகம் இன்று பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுவது மிகவும்
கவலையளிக்கிறது. அனைத்து மசோதாக்களும் ஆளும் கட்சியின் மிருக பலம் மற்றும் மோசடி உத்திகள்
மூலம் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்கும் வாய்ப்பே தரப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன.
இதன் மூலம் முடிவெடுக்கும் நடைமுறையில் மக்களின் பங்கேற்பு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது.
எந்த வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தல்களை நடத்த வேண்டிய
தேர்தல் ஆணையம் எடுக்கிற பல முடிவுகள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது.
பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தாமல் தவிர்த்து வரும் உச்ச நீதிமன்றத்தின்
போக்கு அவ்வமைப்பின் பாகுபாடற்ற தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின்
நாலாவது தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற ஊடகங்கள், அவை அச்சு ஊடகங்களோ அல்லது காட்சி
ஊடகங்களோ பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவை
ஆளும் கட்சிக்கு சேவை செய்வதையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையுமே வழக்கமாகக்
கொண்டுள்ளன.
இந்த ஜனவரி மாதம்,
கொல்கத்தாவில் நடைபெற்ற எங்கள் அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்
பகுதிகள்தான் மேலேயுள்ள பத்திகள்.
இவற்றில் எதையாவது
மோடியாலோ அல்லது முட்டாள் சங்கிகளாலோயோ மறுக்க முடியுமா?
இந்திய ஜனநாயகம் இன்று
கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.
அதனால் மன்னிப்பு
கேட்க வேண்டியது மோடிதான் . . .
வாயைத் திறந்தாலே பொய், பொய் மட்டுமே என்பது ஆட்டுக்காரனின் வாடிக்கையாகி விட்டது.
லேட்டஸ்ட் பொய் . . .
"தேர்தலில் செலவு செய்ததால் என் சேமிப்பெல்லாம் போய் கடன் காரனாக மாறி விட்டேன்"
ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த அறிக்கையில்
"சொந்தப் பணத்தை செலவு செய்யவில்லை"
தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அறிக்கைதான் சரியானது என்றால் நான் கடங்காரனாகி விட்டேன் என்று அனுதாபம் தேடிக் கொள்வது பொய்.
எப்படிப்பார்த்தாலும் ஆட்டுக்காரன் ஒரு பொய்யன் என்பது மட்டும்தான் உண்மை.
பிகு: ஆனாலும் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழு சங்கிகள் ஆட்டுக்காரனுக்கு கொடுக்கிற முட்டுக்கள் இருக்கே, அது வேற லெவல் . . .