மோடியின் உற்ற நண்பர் அதானி, மோடிக்கு எதிராக கம்பு சுற்றுவதாக காண்பித்துக் கொண்டிருக்கும் மம்தா அம்மையாரை சந்தித்துள்ளார். மேற்கு
வங்கத்தில் அதானி முதலீடு செய்யப் போகிறாராம்.
தொழில்
வளர்ச்சி வேண்டுமென்று இடது முன்னணி கொண்டு வந்த சிங்கூர் டாடா நானா திட்டத்தை சீரழித்தவர்
மம்தா பானர்ஜி.
அவர்
இப்போது அதானிக்கு நிலம் தரப் போகிறார்.
ஆமாம்,
விஸ்வாமித்திரர் உருவாக்கிய திரிசங்கு சொர்க்கம் போல அந்தரத்தில் எந்த தொழிற்சாலையும் அமையாதல்லவா! கண்டிப்பாக
நிலம் வேண்டுமே!
அதானிக்கு மம்தா எப்படி நிலம் தரப் போகிறார்?
புத்ததேப்
போலவா? மோடி போலவா?
புத்ததேப்
உருவாக்கிய, டாடா ஒப்புக் கொண்ட வழிமுறை என்ன?
சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?
சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.
சிங்கூர் திட்டத்தை
மம்தா அழித்ததே இது போன்ற நடைமுறை அமலானால் மற்ற முதலாளிகளுக்கு சிரமம்
என்பதால்தான்.
அதே நேரம் அதே டாடா
நானோவுக்கு மோடி ஒதுக்கியது 20,000 ஏக்கர், அதுவும் அடிமாட்டு விலையில்.
இப்போது டாடா நானோ
செயல்படவில்லை. ஆனால் நிலம் அவர்களிடம்தான்.
மம்தா எந்த பாதையை
பின்பற்றப் போகிறார்?
எனக்கு எந்த சந்தேகமும்
இல்லை.
மோடியின் நண்பருக்கு
மோடியின் பாணியில்தான் உதவுவார்.
அப்போதுதான் அவரது
ஏழைப்பங்காளன் வேடமும் கலையும். மம்தா-மோடி மோதல் எல்லாம் வெறும் நாடகம் என்பதும்
புரியும்.
ஐயா. மேற்க்கு வங்கத்தில் இதை போல பேக்கரி டீல் போட்ட மாதிரி நம்ம தோழர்கள் ஏன் கேரளாவில் டீல் போட்டு தொழில்வளத்தை உயர்த்தவில்லை. ? கேரளாவிற்க்கு பேக்கரி டீல் கிடையாதா?
ReplyDeleteஅதுக்கு பதில் சொல்வேன். அது புரியற அளவுக்கு உமக்கு புத்தி இருக்கான்னு தெரியலை. அது மட்டுமல்ல அனாமதேயத்துக்கெல்லாம் விளக்கம் சொல்ற அளவுக்கு நான் வெட்டியாவும் இல்லை. நீர் வொர்த்தும் இல்லை. ஆனா ஒன்னு நீர் ஏதோ பேக்கரி டீலிங் செஞ்ச ஆசாமின்னு தெரியுது? யாருப்பா அது? யாரை வைத்து நீ டீலிங் செய்த?
Delete