Monday, December 27, 2021

ஆதிபராசக்தியின் அன்னபூரணி அவதாரம்

 


அன்னபூரணி சாமியார் பற்றி பரபரப்பாக செய்திகள் உலா வந்த போது போலிச்சாமியார்கள் உதயம் எல்லாம் புதுசு இல்லையே என்றுதான் முதலில் தோன்றியது. பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்வின் காணொளி பார்த்த பிம்புதான் விவகாரம் புரிந்தது,



 இதற்குத்தான் “ரிஷி மூலம்” பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்களோ என்னவோ?

 சரி, எனக்கு ஒரு சந்தேகம் . . .

 வி.ஐ.பி படத்தில் சமுத்திரகனி, தனுஷைப் பார்த்து கேட்பது போல



 “உன் கிட்ட பஞ்சாயத்துக்கு வந்து திட்டு வாங்கின பொண்ணு இப்போ சாமியாராகி  பாப்புலராயிடுச்சு, நீ இன்னும் பஞ்சாயத்துதான் செஞ்சிக் கிட்டு இருக்கே!”

 என்று யாராவது லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்பார்களோ!

 சரி கொஞ்சம் சீரியஸாக பேசுவோமா?

 மனிதர்கள் தங்களுக்கு பிரச்சினைகள் வரும் போது அதற்கு காரணம் என்னவென்று நிதானமாக ஆராய்ந்தால் பிரச்சினையும் தெரியும், அதை தீர்ப்பதற்கான வழியும் கிடைக்கும். பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுக்கு அரசின் கொள்கைகள் காரணமாக இருக்கும். அவற்றை மாற்ற போராட வேண்டும் என்ற ஞானமும் கிடைக்கும்.

 அப்படியெல்லாம் சிந்திக்க முயற்சிக்காமல் உடனடி தீர்வுக்காக குறுக்கு வழியை நாடினால் அந்த வழியில் போலிச்சாமியார்கள்தான் இருப்பார்கள். அவர்களால் பிரச்சினை தீராது, மாறாக புதிய புதிய பிரச்சினைகள்தான் வரும். ஏமாந்து எல்லாவற்றையும் இழந்து நிற்பதுதான் கடைசியில் நடக்கும்.

 போலிச்சாமியார்கள் தானாக உருவாவதில்லை. மக்களின் அவசரம், பேராசை, மூடத்தனம் ஆகியவைதான் உருவாக்குகிறது.

No comments:

Post a Comment