Saturday, December 25, 2021

கிருஷ்ணன் கோயில் கிறிஸ்துமஸ் விழா

 


இரண்டு தினங்களுக்கு முன்பு ஆங்கில ஹிந்துவில் படித்த செய்தி.

கேரள மாநிலம், கொல்லத்தில் கிறிஸ்துமஸ் கரோல் ஊர்வலம் அங்கே உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றவுடன் கோயில் நிர்வாகிகள், கேரள கோயில்களின் பாரம்பரியப்படி நெல், விளக்குகளோடு அந்த ஊர்வலத்தை வரவேற்பார்கள். 

பாதிரியார் வழிபாட்டை நடத்த பாடல்களுக்கு பின்னணியாக கோயில் மணி ஒலிக்கும்.

இது இன்று நேற்றல்ல, பல வருடங்களாக நடக்கிறதாம். கொரோனா காரணமாக இரண்டாண்டுகள் நின்று போன நிகழ்வு இந்த ஆண்டு மிக உற்சாகமாக நடைபெற்றது என்பதை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அதே நேரம்

நேற்று இன்னொரு செய்தியை படித்தவுடன் அந்த மகிழ்ச்சி வடிந்து விட்டது. 

ஆம், கர்னாடகாவில் நேற்று முன் தினம் ஒரு சர்ச் தாக்கப்பட்டுள்ளதாம். செப்டம்பர் தொடங்கி நடைபெற்ற 11 வது தாக்குதல் என்றும் சொல்கிறது அச்செய்தி.

பாஜக ஆளும் மாநிலத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலத்துக்குமான வித்தியாசம் இதுதான். 

No comments:

Post a Comment