கீழே உள்ளது ஆஜான் அவரது பக்கத்தில் எழுதியது. வெறும் ஒரு வரியை மட்டும் படிக்கவில்லை. மோகன்லால் நடித்த "மரைக்காயர்" திரைப்படத்தின் விமர்சனம் என்று பக்கம் பக்கமாக எழுதியதில் ஒரு பத்தி இது. வேறு யார் எழுதியதையும் அரைகுறையாக படித்தெல்லாம் பொங்கவில்லை.
அந்த திரைப்படத்தை நான் பார்க்காததால் அந்த விமர்சனம் சரியா, தவறா என்று தெரியாது. ஆனால் மம்முட்டியை வைத்து தன் வசனத்தில் வந்திருக்க வேண்டிய படம் கைவிடப்பட்ட ஆதங்கம் மட்டும் நன்றாக புரிகிறது. அது இங்கே பிரச்சினை இல்லை.
பிரம்மாண்டமான ஒரு கட்டுரையில் ஒரு பத்தியில் விஷத்தை கக்குகிறார்.
வெள்ளையர்களுடன் நின்றவர்களை துரோகிகள், காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்லக்கூடாது என்று மட்டும் சொல்கிறார். என்ன தியாகிகள் என்று சொல்லுங்கள் என்று மட்டும் சொல்லவில்லை!
சாவர்க்கருக்கு ஆதரவாக ஏற்கனவே 2.0 வில்லன் (அதாங்க பக்சிராஜன் அனந்தகிருஷ்ணன்) களமிறங்கி விட்டார். அவர் நேரடியாக எழுதினார். ஆஜான் மறைமுகமாக எழுதுகிறார்.
இந்திய சுதந்திர வரலாற்றை மாற்ற சங்கிகள் முயல்கிறார்கள். அதற்கு குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல ஆஜான், மாலன், பக்சி போன்றவர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஆஜான் இப்போது ட்ரெய்லர் ஓட்டியுள்ளார். மெயின் பிக்சர் ஓட்டும் போது அடி பலமாக விழும் என்பதை அவரது தொண்டர் படையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
அப்புறம் ஏதோ ஆஜானை திட்டினா கவனம் கிடைக்கும் என்று வேறு அவர் எழுதினார்.
அவரிடம் சொல்லுங்கள்.
நாங்கள் திட்டுவதால்தான் அவருக்கு எங்கள் வட்டத்தில் கவனம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment