நாளை வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.
இரண்டாண்டுகளுக்குப் பின்பு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வெண்மணி நோக்கிய பயணம் தொடங்கி விட்டது.
2004 ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2019 அன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தடைபட்டது. கடந்த ஆண்டு கொரோனா.
இரண்டாண்டுகளாக செல்ல முடியாதது மனதை உறுத்திக் கொண்டே இருந்ததால் இந்த ஆண்டு புறப்பட்டு விட்டேன்.
இப்போதும் கொஞ்சம் உடல் உபாதை இருக்கத்தான் செய்கிறது. 2018 ம் வருடம் எங்கள் சங்கத்தின் சார்பில் உச்சி வெயிலில் நடைபெற்ற போது "வெண்மணி தியாகிகள் உயிரோடு எரியும் போது பட்ட சித்திரவதையை விட இந்த வெக்கை ஒன்றும் பெரிதல்ல" என தமுஎகச மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பேசியது நினைவுக்கு வந்தது.
பயணம் உறுதியாகி விட்டது.
No comments:
Post a Comment