Tuesday, December 7, 2021

ஆஜான் தூக்கத்தை தொலைத்தாரா?



இன்று காலை வலைப்பக்கத்தை திறந்து பின்னூட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்த்தால் அதிகாலை 3.45 மணிக்கு இரண்டு பின்னூட்டங்கள் போடப் பட்டிருந்தன.


அதன் ஸ்க்ரீன் ஷாட் இங்கே

 அடுத்த படியாக பார்த்தால் ஆஜானை நக்கலடித்து எழுதிய பதிவு கடந்த 24 மணி நேரத்தில் 402 முறைக்கு மேல் படிக்கப்பட்டுள்ளது. 


ஆஜானைப் பற்றிய அந்த பதிவு பல முக்கியமான எழுத்தாளர்களின் பக்கத்தில் பார்த்தது என்பதால் ஒரிஜினலை உறுதி செய்யவில்லை.  சரி பார்க்கலாம் என்று ஆஜான் பக்கத்திற்குப் போனால்

இன்றைய நாளில் இதுவரை எழுதியுள்ள ஆறு பதிவுகளில் முதல் பதிவாக என்னையும் மற்றவர்களையும் வசை பாடுகிற "இணைய மொண்ணைகள்" பதிவையும் அதிலே என் பதிவிற்கான இணைப்பையும் பார்த்தேன்.

ஆஜானின் செல்ஃபி கேள்வி பதில்கள் இங்கே




பாவம் ஜெமோ! அவர் தூக்கம் தொலைந்து விட்டது போல!

அதிகாலை மூன்று மணி அளவில் அனாமதேயமாக பின்னூட்டம் இடுவதும் பதிவு எழுதுவமாக உறக்கத்தைக் கைவிட்டு எழுதியுள்ளார்.

அந்த கேள்வி எழுதிய ரவிக்குமாரும் பின்னூட்டமிட்ட அனாமதேயமும் வேறு ஆட்கள் என்று நம்ப நான் என்ன ஆஜான் அடிமைகள் போன்ற மொண்ணையா என்ன!

ஒற்றை வரிகளை அல்ல, ஏராளமாக வாசித்த பின்புதான் உலகின் மிகப் பெரும் பொய்யர், ஆணவமிக்கவர், பெண்களின் எதிரி, மத வெறியர் போன்ற மதிப்பீட்டிற்கு வந்துள்ளேன்.

அந்த குறிப்பிட்ட பதிவு ஆஜான் எழுதாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதை விட ஆணவமாக எழுதிய பல பதிவுகள் உண்டு. அதனால் அந்த பதிவை நீக்கப்போவதோ, வருத்தம் தெரிவிக்கப்போவதோ இல்லை.

ஆஜான் முன்பொரு பதிவில் சொன்னது போல தன்னை வசை பாடுபவர்களின் உயரதிகாரிகளுக்கு புகார் கொடுப்பேன் என்று மிரட்டியது போல எங்கள் நிர்வாகத்திற்கும் புகார் அனுப்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சம்பந்தர் பாடிய தளம், அப்பர் பாடிய தளம் என்று பல கோயில்கள் பிரசித்தி பெற்ற தளங்களாக மாறும். அது போல ஆஜான் வசை பாடிய தளம் என்பதால் என் தளமும் இன்னும் பரபரப்பாகும். தேங்க் யூ ஆஜான். 

7 comments:

  1. யோவ்...! நான் அமெரிக்காவில் இருந்து அந்த அனேமதேய பதிவைப் போட்டேன்! ஆசானின் பல பதிவுகளுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அதற்காக அவர் எழுதுவதை எல்லாம் காமாலைக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை. இந்த உலகத்துலேயே தலை சிறந்த எழுத்தாளர் என அவர் போட்ட பதிவைப் பார்த்து நானும் அதிர்ந்து போனேன்!

    இன்னும் அவர் வண்டி வண்டியாக எழுதிக் குவிக்க வேண்டும் என்பதுதான் பலருடைய ஆவல். படிக்க ஆளில்லாமல் போக வாய்ப்பிருந்தாலும் அதைக் கண்டு அவர் மனம் தளராதவரே! அந்த நம்பிக்கைதான் நாம் ஒரு காந்தியவாதியிடம் காண வேண்டியது!

    ReplyDelete
  2. "அந்த கேள்வி எழுதிய ரவிக்குமாரும் பின்னூட்டமிட்ட அனாமதேயமும் வேறு ஆட்கள் என்று நம்ப நான் என்ன ஆஜான் அடிமைகள் போன்ற மொண்ணையா என்ன?"

    Yes..I live in USA and I am not Ravikumar. I just followed that link and reached to your blog. Please stop assuming things and accept facts as facts and lies as lies.

    ReplyDelete
  3. ஆசானின் கள்ள மெளனத்தை நான் கண்டித்ததைப் பற்றி ஒரு வார்த்தை எழுத மனம் வரவில்லையே...அது ஏன்? இருந்தா நான் ஆசானுடைய ஆளா இருக்கனும்..இல்லன்னா உமக்கு ஜால்ரா அடிக்கனும்! இந்த பைனரி லாஜிக் பேசியே ஒழிகிறது தமிழ்ச் சமூகம்!

    ReplyDelete
  4. யோவ் அமெரிக்கா அனாமதேயம்

    நான் அனாமதேயங்களை நம்புவதில்லை.
    உன்னோட அமெரிக்கா கதையையும் கூட.
    Try something better.
    ஆஜானை காந்தியவாதி என்றதில் நீ கொண்டையை மறைக்காதது தெரிஞ்சு போச்சு. கள்ள மவுனத்தை கண்டித்ததும் ஒரு நாடகம்தான்.

    ReplyDelete
  5. ஆசானை மட்டுமே நம்மால் காந்தியவாதியாகவும் பார்க்க முடிகிறது...தீவிர வலதுசாரியாகவும் பார்க்க முடிகிறது! அதுவே அவருக்குக் கிடைத்த வெற்றிதான்! தமிழில் ஆசானை விட காந்தியைப் பற்றி அதிகம் எழுதியது யார்? அவரை காந்தியவாதி என்று சொன்னது எழுத்தை மட்டும் வைத்து. அவரது நடவடிக்கைகளால் அப்படிக் கூற முடியவில்லை என்பதை நான் மறுக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஜெமோ காந்தியவாதி என்பதை நகைச்சுவையாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.

      Delete