Saturday, December 25, 2021

இதுவும் போச்சா மோடி?

 


செல்லா நோட்டு விவகாரத்தின் போது அதற்குக் காரணமாக மோடி முக்கியமாக சொன்னது இரண்டு காரணங்கள்.

கறுப்புப் பணம் முடங்கிப் போகும். மீட்கப்படும்.

கள்ள நோட்டு அடிக்க முடியாது.

செல்லா நோட்டு அறிவித்த போது புழக்கத்தில் இருந்த நோட்டுக்களில் ஏறக்குறைய 99 % வங்கிகளுக்கு வந்து விட்டது. அதில் முதல் காரணம் அப்போதே அடி பட்டு விட்டது.

இப்போது தேசிய குற்ற ஆவண ஆணையத்தின் அறிக்கை படி 2019 ல் ரூபாய்  25,39,09,130   மதிப்புள்ள 2,87,404  கள்ள நோட்டுக்கள் பிடி பட்டுள்ளது.

அதுவே 2020 ல்   ரூபாய்  92,17,80.480  மதிப்புள்ள 8,34,947  கள்ள நோட்டுக்கள் பிடி பட்டுள்ளது

அதாவது இந்த குறிப்பிட்ட குற்றம் மட்டும் 190.5 % உயர்ந்துள்ளது.

ஆக கள்ள நோட்டு அடிக்க முடியாது என்ற காரணமும் அடிபட்டு விட்டது. சமீப காலமாக 2,000 நோட்டுக்களை பார்க்கவே முடிவதில்லை. “ஈசலின் இறகை விட மெல்லியதானதுஎன்று தோழர் பாலபாரதியால் வர்ணிக்கப்பட்ட 2,000 நோட்டை பதுக்குவது எளிது.

ம்ம்ம்ம்ம். எஸ்.வி.சேகர் சொன்னது போல் சிப்பு வைத்திருந்தாலாவது எங்கே பதுக்கியுள்ளார்கள் என்பதையாது கண்டுபிடித்திருக்கலாம்!

சரிதானே விஷமூர்த்தி?

2 comments:

  1. இந்த கள்ள நோட்டு பாகிஸ்தானில் அச்சேறி இந்தியா வந்து சேர்ந்தவை. அச்சு இயந்திரங்கள் பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் தான் பொறுப்பு. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. காமெடி செய்யாதீங்க சார், ப.சிதம்ப்ரம் பாகிஸ்தானுக்கு விற்றது உண்மையாகவே இருக்கட்டும். இவங்கதான் அந்த ப்ழைய நோட்டு எல்லாத்தையும் மாத்தி, புது டெக்னிக் கண்டு பிடிச்சு புது நோட்டு விட்டாங்களே! அதெல்லாம் டுபாக்கூரா?

      Delete