Wednesday, December 15, 2021

இப்போவாவது நீக்குவீங்களா மோடி?

 


உபி மாநிலம் லக்கீம்பூர் கேரி யில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோடியின் மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் அபய் மிஸ்ரா காரேற்றிக் கொன்ற கொடூரத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

 உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு அந்த கொடூரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

 அந்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி அங்கே நடந்தது திட்டமிட்ட சதி என்றும் அதி வேகத்தால் நடைபெற்ற விபத்து, அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து ஆகிய சட்டப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை திட்டமிட்ட கொலை என்ற சட்டப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தின் மனு செய்துள்ளது.

 கொடூரக் கொலை செய்தது மகன். நான் நினைத்தால் ஒரு நாளில் இந்த போராட்டத்தை ஒடுக்கி விடுவேன் என்று மார் தட்டிச் சொன்னது மந்திரி. ஆக கொலைக்கு தூண்டியது மோடியின் மந்திரியே.

 கொலை செய்தவனை விட கொலைக்கு தூண்டியவனே பெரிய குற்றவாளி என்று சட்டம் சொல்கிறது.

 அப்படிப்பட்ட கொலைக்குற்றவாளியை மோடி இனியாவது பதவியிலிருந்து தூக்குவாரா?

 அல்லது விசாரணை அதிகாரியை வேறெங்காவது தூக்கி அடித்து பழி வாங்குவாரா?

 இரண்டாவதற்கான வாய்ப்புதான் அதிகம் என்று மோடியின் வரலாறு சொல்கிறது . . .

 

No comments:

Post a Comment