ஆசிரியர் தினத்தில் மோடி ஆற்றுகிற உரையை மாணவர்கள்
அனைவரும் கண்டிப்பாக கேட்க கறாரான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ எடுத்து வருவது பற்றி
நேற்று எழுதியிருந்தேன். சரி இவர்கள் என்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடுகின்றார்
என்று பார்த்தால் எப்பவும் போல செப்டம்பர் ஐந்துதான், மறைந்த குடியரசுத்தலைவர்
டாக்டர் சரவபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளில்தான் கொண்டாடுகிறார்கள்.
இதில் என்ன சந்தேகம் என்று கேட்கிறீர்களா?
பாஜக மற்றும் சங் பரிவாரத்திற்கு என்று சில நாட்கள்
உள்ளது.
எட்டு மணி நேர உழைப்பிற்காக ரத்தம் சிந்திய சிக்காகோ
தோழர்களின் நினைவாக உலகெங்கும் கொண்டாடப்படும் மே முதல் நாள் இவர்களுக்கு
தொழிலாளர் தினம் கிடையாது. தேவலோக தச்சர் என்று கற்பனைக் கதைகளில் சொல்லப்படும்
விஸ்வகர்மாவின் பிறந்த நாள்தான் இவர்களின் தொழிலாளர் தினம்.
அதே போல மிகப் பெரிய புனைவான மகாபாரதத்தை
எழுதியதாகச் சொல்லப்படும் வேத வியாசரின் பிறந்த நாள்தான் இவர்களுக்கு ஆசிரியர்
தினம்.
இவர்களின் பிறந்த நாளை எல்லாம் எப்படி
அறிவியல்பூர்வமாக கண்டு பிடித்தார்கள் என்பது தெரியவில்லை.
அதனால்தான் சங் பரிவார கோட்பாட்டிற்கு மாறாக
செப்டம்பர் ஐந்தே ஆசிரியர் தினத்தை மோடி கொண்டாடுவது சிறப்பானதுதான்.
ஆனால் அன்றைக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதையும்
நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
ReplyDeleteAnother of killer communists rants. Shame.
ReplyDeleteகாவிக்கூட்டத்தின் எடுபிடியாக இருப்பது மிகப்பெரிய கௌரவமா அனானி, மோடியை ஆதரிப்பதை விட மானம் கெட்ட செயல் எதுவும் இல்லை
Delete