Wednesday, October 17, 2012

என்ன திமிர் அந்த அதிகாரிக்கு ? சோனியா ஆவேசம்





சோனியா காந்திக்கும் ஹரியானா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவிற்கும் இடையில் இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமோ?

சோனியா : என்ன மிஸ்டர் உங்க மாநிலத்தில ஒன்னுமே சரியா நடக்க மாட்டேங்குது?

ஹூடா ; மாதாஜி, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. இனிமே கற்பழிப்பு புகார் எதுவும் வராம இருக்கனும்னு கட்டப் பஞ்சாயத்து தலைவர்கள் கிட்ட பேசிட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க, அவங்க பசங்க கிட்டே கற்பழிச்ச பிறகு கொலை பண்ணி புதைச்சுட சொல்லிட்டாங்க, இனிமே அந்த மாதிரி புகார் வராதுங்க மேடம்.

சோனியா : அதை யாருய்யா கேட்டா? அது பெண்ணைப் பெத்தவன் பிரச்சினை? என் குடும்பப் பிரச்சினைக்கு வா

ஹூடா : அது என்ன மேடம் உங்களுக்கு ஒரு பிரச்சினைனா, அது இந்தியாவுக்கே பிரச்சினையாச்சே!

சோனியா : நீ எத்தனை வருஷமா சி.எம் மா இருக்க?

ஹூடா : உங்க புண்ணியத்துல ஏழு வருமா இருக்கேன் மாதாஜி

சோனியா : வருஷத்துக்கு ஒரு சி.எம்ம மாத்தற கட்சியில ஏழு வருஷமா இருக்க, அப்டினா, ஏதோ விசுவாசி அப்டிங்கறதாலதான். ஆனா அப்படி இல்ல போலருக்கே நீ?

ஹூடா : மாதாஜி என்ன வார்த்தை சொல்லிட்டீங்க, உங்க மாமியார் சொன்னா துடைப்பத்தை வைச்சு பெருக்குவேன்னு சொல்லி ஒத்தர் ஜனாதிபதியானாரு, அவரை விட பெரிய அடிமை நானு.

சோனியா : அப்டியிருக்கும்போது என் மாப்பிள்ளை வாங்கின நிலம் பற்றியெல்லாம் ஒத்தன் தோண்டறானாமே, பிரியங்கா வந்து அழும் போது எனக்கே அழுகை வந்தது தெரியுமா?

ஹூடா : அம்மா, அவன் கொஞ்சம் நேர்மையான அதிகாரி
சோனியா: காங்கிரஸ் ஆட்சியில நேர்மையான அதிகாரியா, தப்பாச்சே
என் மாப்பிள்ளை நிலம்னு தெரியாம பிரச்சினை பண்றானா?

ஹூடா : தெரிஞ்ச பிறகுதான் பண்றான்...

சோனியா : என்ன திமிரு அவனுக்கு?

ஹூடா : அம்மா, நான் வேணா கட்ட பஞ்சாயத்துக்காரங்க கிட்ட சொல்லி போட்டுத் தள்ளிடவா

சோனியா : இதை முன்னாடியே செஞ்சிருக்கனும், இப்ப செஞ்சா என் தலையும் மாப்பிள்ளை தலையும்தானே உருளும்.

ஹூடா : அப்ப ஏதாவது சொல்லி அவன மாத்திடறேன்.

சோனியா : உடனே ஏதாவது செய்யு, இல்லைனா புது சி.எம் வந்து செய்ய வேண்டியிருக்கும்.

ஹூடா : மாதாஜி, அதுக்கெல்லாம் அவசியமே இல்லை, என்னை விட வெட்கம் கெட்டவனை நீங்க கண்டு பிடிக்கவே முடியாது. நானே அவனை மாத்திடுறேன்.

பின் குறிப்பு : இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இது போல நடந்திருக்கவே நடந்திருக்காது என்று யாராலாவது மறுக்க முடியுமா?


1 comment: