Tuesday, October 2, 2012

காந்தி ஜெயந்தி - தமிழகக் குடிமகன்களின் சாபமும் அம்மாவின் தயாள குணமும்



 

இன்று  பெட்டிக் கடை ஒன்றில் கேட்ட ஒரு புலம்பலை
அப்படியே  இங்கே பதிவு செய்கிறேன்.

" காந்தி ஜெயந்திக்கு ஒயின் ஷாப்பை லீவ் விடனும்னு
கண்டு பிடிச்சவன  செருப்பால அடிக்கனும். அந்தாள்
செத்து எவ்வளவோ வருஷமாச்சு, இன்னும் ஏண்டா
ஒவ்வொரு வருஷமும் நம்மள சாவடிக்கிறாங்க,

லீவும் விட்டுட்டு தண்ணியும் அடிக்காதனு சொன்னா
என்னங்கடா நியாயம் இது?

பார் அட்டாச்சுட் ஹோட்டல தங்கறவனுங்களுக்கு
ரூம் சர்வீஸ்ல சரக்கு தராங்களாம், நாம் மட்டும்
முட்டாளுங்களா?
 
அந்தாள் மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தா 
நானே சுட்டுடுவேன் " 

தமிழகத்தின்  கெட்ட வார்த்தைகளை நான் 
தவிர்த்து விட்டேன்.

டாஸ்மாக் ஏற்படுத்தியுள்ள  தாக்கம் இது. 

ஒரு நாளைக்கே இப்படி என்றால் மது விலக்கு
வந்தால் தமிழகக் குடிமகன்கள்  கண்டிப்பாக
பைத்தியம் பிடித்துத்தான் அலைவார்கள்.

அதனால்தான் கருணை உள்ளம்  கொண்ட
அம்மா, டாஸ்மாக் கடைகளை மூடாமல் 
குடிமகன்களை  பாதுகாத்துள்ளார்.

 

1 comment:

  1. அதுவும் சரியாகத்தான்படுகிறது
    அம்மா கருணை கொள்ளட்டும்

    ReplyDelete