வசமாக
மாட்டிக் கொண்ட மன்மோகன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?
நிலக்கரி
ஊழல், கிரானைட் ஊழல், ராபர்ட் வதேரா ஊழல், சல்மான் குர்ஷித் ஊழல் போன்றவற்றால்
சற்று அமுங்கிப் போயிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம்
ஊழல் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே “கீழே இருக்கறவன் பார்த்துப்பான்” என்று
பயில்வான் ரங்கநாதன் போல இருந்ததாக இத்தனை
நாள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்
அண்ணன் இப்போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
அமைச்சரவைச்
செயலாளர் சந்திரசேகர் நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளிக்கையில்
2001 விலைக்கு 2007 ல் ஸ்பெக்ட்ரம்
அளிப்பது சரியல்ல என்றும் 36,000 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும் என
தான் எழுதிய குறிப்பை பிரதமர் அலட்சியப்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.
அமைச்சரவைச்
செயலாளர் என்பவர்தான் இந்தியாவிலேயே மிகவும் பெரிய சக்தி படைத்த அதிகாரி. அவர்
எச்சரித்ததை பிரதமர் அலட்சியப் படுத்தினார் என்றால் அதற்கு ஒரே ஒரு பொருள்தான்
உண்டு.
அது
ஸ்பெக்ட்ரம்
ஊழல் மன்மோகன்சிங்கிற்கு தெரிந்தே நடந்துள்ளது.. அவருக்கும் கொள்ளையில் பங்கு
உண்டு.
இதற்கு அந்த
பஞ்சாப் சிங்கம் என்ன பதில் அளிக்கப் போகின்றது.?
சோனியாவின் நேர்மைக்கான முகமூடி மன்மோகன். இப்போது முகமூடியே கிழிந்துவிட்டது.
ReplyDelete