Monday, October 22, 2012

ப்ளாக் எழுதாதே... பழி வாங்கப்படுவாய்....

காலை பத்து மணி வரை சாலை விளக்குகள் அணைக்கப்படாமல்
அலட்சியம் காண்பிக்கப் படுகிறது என்று வெள்ளிக் கிழமை அன்று
படங்களுடன் பதிவிட்டேன்.

காலையில் விளக்கு எரிகிறது என்றா எழுதுகிறாய்?
இனி இரவிலும் உனக்கு சாலை விளக்கு கிடையாது என்று
எங்கள் மாநகராட்சி முடிவு செய்து விட்டது போலும். 

அன்று முதல் இதோ இன்று இந்த நொடி வரை 
சாலை விளக்கு எரியவில்லை. வேலூர் மாநகராட்சியின்
மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தேடி
தொலைபேசி செய்தால் எடுப்பதற்கு ஆளில்லை.

இந்த இருள்மயம் எத்தனை நாள் தொடரும் என்று
பார்ப்போம்....

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
மழை பெய்யும் என்று திருவள்ளுவர் சொன்னார்.
ஆனால் இங்கே நல்லவன் நான்  ஒருவன்
ப்ளாக்கில் எழுதியதற்கு எங்கள் பகுதி முழுவதுமே
சாலை விளக்கு எரியவில்லை.


5 comments:

  1. அடேங்கப்பா........... நீங்க சொல்வதை நம்ப முடியவில்லை. ஏன்னா இவ்வளவு விரைவா ஒரு நடவடிக்கையை நம்ம தூங்கு மூஞ்சி அரசு அலுவலக நிர்வாகமும் எடுத்திடுமா என்ன!!

    ReplyDelete
  2. சாலை விளக்கு அதற்குப் பின்பு எரியவில்லை என்பது உண்மை. அரசால் நல்லது பண்ண முடியாது. கெட்டதை வேகமாக செய்ய முடியும். மன்மோகன்சிங் அரசைப் பார்த்துமா இந்த சந்தேகம்

    ReplyDelete
  3. நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொண்டேன் நண்பரே!!

    ReplyDelete
  4. nanbarae, oru siru thiruththam . Nallar oruvar ularael avar poruttu ellaarkkum peyyum mazhai ezhuthiyadhu thiruvalluvar alla. adhu avvaiyarain moodhurai.
    idho antha muzhu paadal. NELLUKKU IRAITHA NEER vaaikkal vazhiyodi pullukkum aangae posiyumaam thollulagil nallar oruvar ularael avar poruttu ellarkkum peyyum mazhai

    ReplyDelete